பல நூறு கோடி ரூபாய்களைச் செலவழித்து, புதுடில்லியில் புதிய நாடாளுமன்றக் கட்டடத்தைக் கட்டி, அதை அவசர அவசரமாக, குடியரசுத் தலைவரைக்கூட அழைக்காது தானே திறந்து வைத்தார் பி.ஜே.பி. பிரதமர் மோடி அவர்கள்.
அதில் காவிகளுடன் தமிழ்நாட்டு ஆதீனங்களும் டில்லிக்குச் சென்று பண்டித ஜவகர்லால் நேருவிடம் முன்பு தனிப்பட்ட முறையில் திருவாவடுதுறை ஆதீனம் செய்து வழங்கிய வெற்றிச் செங்கோலை, தேடிக் கண்டுபிடித்து அதனைக் கொண்டு ஒரு பெரிய நாடகமே நடத்தப்பட்டது.
அச்செங்கோலும் புதிய கட்டடத்தில் கண்ணாடிப் பேழையில் வைக்கப்பட்டு, அதிக வெளிச்சத்துடன் விளம்பரப்படுத்தப்பட்டது!
புதிய நாடாளுமன்றக் கட்டடம் அதிகாரப்பூர்வமாக சில மாதங்களுக்கு முன்பே திறக்கப்பட்டு விட்ட நிலையிலும், ஏனோ இப்போது கூடியுள்ள நாடாளுமன்றக் கூட்டத் தொடர் அங்கு நடைபெறாமல், பழைய நாடாளுமன்றக் கட்டடத்திலேயே நடைபெறுகிறது என்ற கேள்விக்கு டில்லி அரசியல் - பா.ஜ.க. வட்டாரங்கள் கூறும் பதில் என்ன தெரியுமா?
‘‘புதிய நாடாளுமன்றக் கட்டடத்தில் வாஸ்து சாஸ்திர குறைபாடு உள்ளது; அதில் இப்போது நாடாளுமன்றக் கூட்டத் தொடரை நடத்தினால், வரும் நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் தோல்வி ஏற்படக் கூடும் என்ற ஜோதிடர் கூற்றுப்படி, அது தவிர்க்கப்படுகிறது'' என்று டில்லி அரசியல் வட்டாரங்களில் பேச்சுகள் அடிபடுகின்றனவே!
ஆதீனங்களின் செங்கோலுக்கும் சக்தி இவ்வளவுதானா?
இது உண்மையா?
No comments:
Post a Comment