மாநில அரசின் கீழ் இயங்கிடும் தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகத்திற்கு குறுகிய காலத்திலேயே அதிகபட்ச தரக் குறியீடு ! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

மாநில அரசின் கீழ் இயங்கிடும் தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகத்திற்கு குறுகிய காலத்திலேயே அதிகபட்ச தரக் குறியீடு !

திராவிட மாடல் ஆட்சி நடைபெறும் தமிழ்நாட்டில் மாநில அரசின் கீழ் இயங்கும் தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகத்திற்கு ஏ+  (A+) குறியீடு வழங்கப்பட்டுள்ளது.  நாடு முழுவதும் பல்கலைக் கழகங்களின் அடிப்படைக் கட்டமைப்புகளையும், செயல்பாடுகளையும் நேரடியாக ஆய்வு செய்து, தரக் குறியீடு வழங்குவதை தொடர் பணியாகவே பல்கலைக் கழக மானியக் குழுவின் தேசிய தர நிர்ணய குழுவினர் (National Assessment and Accreditation Council - NAAC) மேற்கொண்டு வருகின்றனர்.

தமிழ்நாடு திறந்த வெளிப் பல்கலைக் கழகத்திற்கு அந்தக் குழுவினர் நேரில் வந்து, ஆய்வு செய்து அதன் செயல்பாட்டைப் பாராட்டி  ஏ+ (A+)   தரக் குறியீட்டை வழங்கியுள்ளனர். 

2002ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட தமிழ்நாடு திறந்தவெளிப் பல்கலைக் கழகம் 20 ஆண்டு காலத்திலேயே இந்தத் தரக் குறியீட்டை பெறுவது முன் நிகழ்ந்திடாதது. இதுவரை எந்த பல்கலைக் கழகத்திற்கும் இவ்வளவு குறுகிய காலத்தில் அதிகபட்ச தரக் குறியீடு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. 'திராவிட மாடல்' ஆட்சியில் கல்வி - உயர் கல்வியின் தரம் உயர்ந்த நிலையில் அமைந்துள்ளதற்கு தேசிய தர நிர்ணய குழுவினர் அளித்த தரக் குறியீடு ஒரு சான்றாகத் திகழ்கிறது.

No comments:

Post a Comment