செங்கல்பட்டு,ஆக.27- மாமல்லபுரத்தில் இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மய்யம் மற்றும் சென்னை அய்.அய்.டி உள்ளிட்ட பிற நிறுவனங்கள் இணைந்து நடத்திய பன்னாட்டு கட்டமைப்பு நம்பகத் தன்மை மாநாடு 25.8.2023 அன்று நிறைவடைந்தது.
இந்த மாநாட்டிற்கு இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மய்யத்தின் இயக்குநர் வெங்கட்ராமன் தலைமை தாங்கினார். அறிவியல் தொழில்துறை, ஆராய்ச்சி துறை செயலர் மற்றும் கவுன் சில் தலைமை இயக்குநர் கலைச்செல்வி காணொலி வாயிலாக மாநாட்டை துவக்கி வைத்தார்.
மாநாட்டு தலைவரும் சென்னை அய்.அய்.டி பேராசிரியருமான ரகு பிரகாஷ், இந்திய அணுமின் கழகத்தின் பொறி யியல் பிரிவு செயல் இயக்குநர் ராமமோகன், தர உறுதி செயல் இயக்குநர் தாமஸ் மேத்யூ மற்றும் இந்தியா, வெளிநாட்டு விஞ்ஞானிகள், பொறியாளர்கள், கல்வியாளர்கள், தொழில் வல்லுநர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் மாநாட்டில் பங்கேற்றனர். மாநாட்டில் அணுசக்தி பாதுகாப்பு, ரசாயனம், விண் வெளி ஆய்வு, எண்ணெய் கிணறுகள் கட்டமைப்பு, புதிய கண்டுபிடிப்புகளின் நம்பகத் தன்மை, வருங் கால அறிவியல் வளர்ச்சி உள்ளிட்ட முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது. அதற்கான ஆய்வுக் கட்டுரைகள் அடங்கிய புத்தகம் வெளியிடப்பட்டது.
No comments:
Post a Comment