தமிழ்நாட்டில் நில அபகரிப்பு தொடர்பான புகார்களை விசாரிக்க காவல் துறையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவுகள் உருவாக்கப்பட்டன.
அதே போல இது சம்பந்தமான வழக்குகளை விசாரிக்க சிறப்பு நீதி மன்றங்களும் அமைக்கப்பட்டன. இது தொடர்பாக 2011ஆம் ஆண்டு தமிழ் நாடு அரசு பிறப்பித்த இரு அரசாணை களை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்தது.
அந்த உத்தரவை உச்ச நீதிமன்றமும் உறுதி செய்தது. இருப்பினும், நில அப கரிப்பு தடுப்பு பிரிவு தொடர்ந்து செயல் படுவதாகவும், எந்த பணியும் செய் யாமல் அந்தப் பிரிவில் பணியாற்றும் காவல் துறையினர் ஊதியம் பெறு வதால் நில அபகரிப்பு தடுப்பு பிரிவை கலைக்கும்படி தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிடக் கோரி மதுரையைச் சேர்ந்த வழக்குரைஞர் ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது, உச்ச நீதிமன்றம் அரசா ணைகளை ரத்து செய்துள்ள நிலையில் நில அபகரிப்பு தடுப்பு பிரிவு தொடர்ந்து செயல்படுவது சட்டவிரோதமானது என்று மனுதாரர் தரப்பில் வாதிடப் பட்டது.
தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், நில அபகரிப்பு தடுப்பு பிரிவு என்ற பெயரில் எந்த சிறப்பு பிரிவும் செயல்படாது. இது சம்பந்தமாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
இதையடுத்து, நில அபகரிப்பு பிரிவு தற்போது செயல்படவில்லை என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவித்த நீதிபதிகள், மனுதாரரின் குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளதாக கூறி வழக்கை முடித்து வைத்தனர்.
No comments:
Post a Comment