மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றார் ராகுல்காந்தி! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 7, 2023

மீண்டும் நாடாளுமன்றத்திற்கு சென்றார் ராகுல்காந்தி!

புதுடில்லி, ஆக. 7 ராகுல் காந்தி மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டதை  மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன் மூலம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளு மன்ற உறுப்பினர் ஆனார்.

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்டு இருந்த 2 ஆண்டு சிறைத் தண்டனையை உச்சநீதிமன்றம் நிறுத்தி வைத்துள்ளதால், அவரது மக்களவை உறுப்பினர் பதவியை மீண்டும் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கோரிக்கை விடுத்து வந்தது.இது தொடர்பாக கட்சியின் மக்களவை தலைவர் ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, அவைத்தலைவர் ஓம் பிர் லாவை சந்தித்து வேண்டுகோள் விடுத் தார். மேலும் மக்களவை செயலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த மனுவை மக்களவை செயலகம் இன்று பரிசீலிக்கும் என எதிர்பார்க் கப்பட்டது. எதிர்க்கட்சிகளும், பதவி நீக்கம் செய்யும்போது காட்டிய வேகத்தை ஒன்றிய அரசு திரும்பப் பெறும் விவகாரத்தில் காட்டவில்லை என்று விமர்சித்தன. இந்த நிலையில், ராகுல் காந்தியின் தகுதி நீக்கத்தை மக்களவை செயலகம் திரும்பப் பெற்றுள்ளது. இதன்மூலம் ராகுல் காந்தி மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினர் ஆகியுள்ளார்.  இன்று நாடாளுமன்றம் சென்றார் ராகுல் காந்தி. இதனால்,நாளை தொடங்க உள்ள ஒன்றிய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி பங்கேற்க இருக்கிறார்.


No comments:

Post a Comment