ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பீகார் மாநில அரசுக்கு தடையில்லை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த பீகார் மாநில அரசுக்கு தடையில்லை!

பாட்னா உயர்நீதிமன்றம் தீர்ப்பு

பாட்னா, ஆக.3- பீகாரில் ஜாதிவாரி கணக் கெடுப்பு நடத்த தடை விதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுக்களை, பாட்னா உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

பீகாரில், முதலமைச்சர் நிதீஷ் குமார் தலைமையிலான அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இங்கு, 2022லிருந்து ஜாதிவாரி கணக்கெடுப்பு நடக்கும் பணி துவங்கியது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் பாட்னா உயர்நீதிமன்றத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த இடைக்காலத்தடை விதிக்கப்பட்டது.

'ஜாதிவாரி கணக்கெடுப்பு என கூறி, மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இது போன்ற கணக்கெடுப்பை நடத்த, ஒன்றிய அரசுக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது. மாநில அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தக் கூடாது' என மனுக்களில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், கணக்கெடுப்புக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு, வழக்கை ஒத்தி வைத்தது.

இதை எதிர்த்து, மாநில அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. உச்சநீதிமன்றம், தடையை நீக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், பாட்னா உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கில், தலைமை நீதிபதி வினோத் சந்திரன் தலைமையிலான அமர்வு தீர்ப்பளித்தது.

அப்போது, ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி கள் உத்தரவிட்டனர்.

இதனையடுத்து மாநில அரசுகள் ஜாதி வாரி கணக்கெடுப்பு நடத்த தடையில்லை என்ப தால், பீகாரில் ஜாதி வாரி கணக்கெடுப்பு பணிகள் மீண்டும் தொடரும் என்று கூறப்படு கிறது.

No comments:

Post a Comment