வெறுப்பு கக்கும் பேச்சுகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

வெறுப்பு கக்கும் பேச்சுகளை அனுமதிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் கருத்து

புதுடில்லி, ஆக. 12- வெறுப்பு பேச்சு குறித்து ஆராய குழு ஒன்றை ஒன்றிய அரசு அமைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

அரியானா உட்பட சில மாநிலங்களில் சமீ பத்தில் மத கலவரங்கள் நடந்தன. இதில் 6 பேர் உயிரிழந்தனர். குறிப் பிட்ட பிரிவைச் சேர்ந்த வர்களை கொல்ல வேண் டும் என்றும் அவர்களை சமூக ரீதியாகவும், பொரு ளாதார ரீதியாகவும் புறக் கணிக்க வேண்டும் என் றும் பொதுக் கூட்டங்க ளில் பேசப்பட்டன. இச் சம்பவங்களை தடுக்க ஒன்றிய, மாநில அரசுக ளுக்கு உத்தரவிட கோரி பத்திரிகையாளர் ஷகீன் அப்துல்லா உச்சநீதிமன் றத்தில் மனு செய்திருந்தார்.

இந்த மனுவை நீதி பதிகள் சஞ்சீவ் கண்ணா மற்றும் எஸ்.வி.என் பாட்டீ ஆகியோர் அடங் கிய அமர்வு விசாரித்தது. அப்போது ஒன்றிய அரசு சார்பில் ஆஜரான கூடு தல் சொலிசிடர் ஜெனரல் நட்ராஜிடம், வெறுப்பு பேச்சு சம்பவங்களை தடுக்க மாநிலங்களுக்கு அறிவுறுத்தல்களை அனுப்ப வேண்டும் என்றும், இது போன்ற சம்பவங்களை தடுப்பது குறித்து ஆராய ஆகஸ்ட் 18ஆம் தேதிக்குள் குழு ஒன்றை அமைக்க வேண் டும் என்றும் நீதிபதிகள் கூறினர்.

அதன்பின் நீதிபதிகள் கூறுகையில், ‘‘அனைத்து சமுதாயத்தினர் இடையே மதநல்லிணக் கம் இருக்கவேண்டும். அனைத்து சமுதாயத்தின ரும் பொறுப்புடன் இருக்க வேண்டும். வெறுப்பு பேச்சு நல்லதல்ல. இதை யாரும் ஏற்க முடியாது’’ என்றனர்.

No comments:

Post a Comment