கருநாடகத்தில் பிஜேபி ஆட்சி ஊழலை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 13, 2023

கருநாடகத்தில் பிஜேபி ஆட்சி ஊழலை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆணையம் முதலமைச்சர் சித்தராமையா அறிவிப்பு

பெங்களூரு, ஆக. 13 -  பா.ஜ. ஆட்சியில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரணை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஆணையம் அமைத்து முதலமைச்சர் சித்தராமையா உத்தரவிட் டுள்ளார். அரசு ஒப்பந்ததாரர் களிடம் 40 சதவீத கமிஷன் பெற்ற தாக முந்தைய பா.ஜ. ஆட்சியில் காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது. இதனால் மேனாள் அமைச்சர் ஈஸ்வரப்பா பதவி இழந்தார். இதே குற்றச்சாட்டு மேனாள் முதல மைச்சர் பசவராஜ் பொம்மை மீதும் எழுந்தது.

இந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து காங்கிரஸ் ஆட்சி அமைந் தவுடன் விசாரிக்கப்படும் என்று சித்தராமையா தேர்தல் பிரசாரத் தில் தெரிவித்திருந்தார். 

இதுதொடர்பாக டிவிட்டர் பதிவில் முதலமைச்சர் சித்தரா மையா, ‘பாஜ ஆட்சி மீதான ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிப்பதாக சட்டப்பேரவை தேர்தலில் வாக் குறுதியளித்தோம்.

பா.ஜ.வின் ஊழல், கமிஷன், வரி சூறையாடல் ஆகியவற்றிற்கு எதி ராக காங்கிரஸ் மீது நம்பிக்கை வைத்து வாக்களித்து 135 தொகுதி களில் வெற்றிபெற செய்து ஆட்சி அதிகாரத்தை மக்கள் வழங்கி யுள்ளனர்.

அதனால் மக்களுக்கு செய்த சத்தியத்தை காப்பாற்றுவது எங் கள் கடமை. அந்தவகையில், பாஜ ஆட்சியில் நடந்த ஊழலை விசா ரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி பி.வீரப்பா தலைமையில் விசாரணை ஆணை யம் அமைக்கப்பட்டுள்ளது.

பா.ஜ. ஆட்சியில் பணிகள் முடிக்கப்படுவதற்கு முன்பாகவே ஒப்பந்ததாரர்களுக்கு பணம் வழங் கப்பட்டுள்ளது.

சில இடங்களில் பாதிப் பணிகள் முடிந்த நிலையிலேயே பணம் வழங்கப்பட்டுள்ளது. பா.ஜ. ஆட்சியில் நடந்த ஊழலை விசாரிக்க அரசு உத்தரவிட்டுள்ள நிலையில், ஒப்பந்ததாரர்களுக்கு இப்போது பில் தொகையை விடுவிப்பது சரியாக இருக்காது. 

ஒப்பந்ததாரர்களுக்கு அரசு துரோகம் செய்யாது. அதனால் பயப்பட வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment