புதுடில்லி, ஆக. 27- நாட்டில் வெறுப் புணர்வுக் குற்றங் களை தடுக்க, 2018-ஆம் ஆண்டு வழங் கப்பட்ட வழிகாட்டுதல்களின் படி மேற் கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து 3 வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நாட்டில் வெறுப்புணர்வு குற்றங்களை தடுக்க, கடந்த 2018-ஆம் ஆண்டு பல்வேறு வழிகாட்டுதல்களை உச்சநீதிமன்றம் வழங்கியது. அத்துடன் அத்தகைய குற்றங்களை கவனமாகக் கண்காணிக்க ஒவ்வொரு மாவட்டத்திலும் பொறுப்பு அதிகாரிகளை நியமிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற் கொள்ளுமாறு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு உச்சநீதி மன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில், வெறுப் புணர்வு பேச்சுகளைத் தடுக்க உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி. பாட்டி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பாக 25.8.2023 அன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, “நாட்டில் அமைதி, நல்லிணக்கம் மற்றும் சகோதரத்துவம் நிலவ வேண்டும் என்று கருதுகிறோம்.
இந்நிலையில், "வெறுப்புணர்வு குற்றங் களை தடுக்க 2018-ஆம் ஆண்டு உச்சநீதி மன்றம் வழங்கிய வழிகாட்டுதல்கள் மிக வும் விரிவாக உள்ளன. அவற்றை வலுப்படுத்த கூடுதல் வழிகாட்டுதல்கள் வழங்கப்படும்" என்று நீதிபதிகள் தெரி வித்தனர்.
“2018-ஆம் ஆண்டு பிறப்பித்த உத்த ரவுக்கு இணங்கி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் எவ்வாறு செயல் பட்டுள்ளன என்பது குறித்த விவரங்களை, அவற்றிடம் இருந்து 3 வாரங்களுக்குள் ஒன்றிய அரசு சேக ரிக்க வேண்டும். அதற்குள் விவரங்கள் கிடைக்காவிட்டால், அது குறித்து இந்த வழக்கின் அடுத்த விசாரணை யின் போது உச்சநீதிமன்றத்துக்கு ஒன்றிய அரசு தெரியப்படுத்த வேண்டும்” என் றும் உத்தரவிட்டனர். இதேபோல “2018-ஆம் ஆண்டு உத்தரவுக்கு ஏற்ப, வெறுப்புணர்வு குற்றங்களை கண்காணிக்க மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்க ளில் பொறுப்பு அதிகாரிகள் நியமனம் குறித்த விவரங்கள் அடங்கிய நிலவர அறிக்கையை, ஒன்றிய உள்துறை அமைச்சகம் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்" என்றும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
No comments:
Post a Comment