புதுடில்லி, ஆக.12- டில்லியில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இருந்து தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
டில்லியில் காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் தலைமையில் காவிரி மேலாண்மை ஆணையத்தின் 22 ஆவது கூட்டம் நேற்று (11.8.2023) தொடங்கியது. காவிரி மேலாண்மை ஆணைய தலைவர் எஸ்.கே.ஹல்தர் தலைமையில் கூட்டம் நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு சார்பில் நீர்வளத்துறை செயலாளர் சந்தீப் சக்சேனா, காவிரி தொழில்நுட்ப குழு தலைவர் சுப்பிரமணியம் பங்கேற்றுள்ளார். இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு கருநாடகா, கேரளா மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நீர்வளத்துறை செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர். இந்த கூட்டத்தில் காவிரி நீர்ப் பிடிப்பு பகுதிகளில் மழைபெய்து வரும் நிலையில், நீர்வரத்து எவ்வாறு உள்ளது, கருநாடக அணைகளில் நீர்வரத்து எவ்வாறு உள்ளது, நீர் வெளியேற்றம், நீர் இருப்பு ஆகியவை குறித்து விவாதிக்கபட்டது.
தொடர்ந்து கடந்த ஜுன் மாதம் கருநாடக அரசு காவிரியில், 26.3 டிஎம்சி தண்ணீர் தமிழ்நாட்டிற்கு திறந்து விடவேண்டும், ஆனால் 3.78 டிஎம்சி தண்ணீர் மட்டுமே கருநாடக அரசு திறந்து விட்டுள்ளது. எஞ்சிய 22.54 டிஎம்சி தண்ணீரை கருநாடக அரசு உடனடியாக திறந்து விட உத்தரவிட வேண்டும். அதற்காக காவிரி மேலாண்மை ஆணையத்தை உடனடியாக கூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்கள். ஆனால், கோரிக்கையை ஏற்காததால் தமிழ்நாடு அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர்.
No comments:
Post a Comment