தேங்காயை தலையில் உடைப்பது, சாட்டையால் அடி வாங்குவது - இதுதானா பக்தி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

தேங்காயை தலையில் உடைப்பது, சாட்டையால் அடி வாங்குவது - இதுதானா பக்தி?

திண்டுக்கல்,ஆக.9 - கடவுள், மதம், பக்தி என்றாலே ஏன்? எதற்கு என்று கேள்வி எழுப்பாமல் அப்படியே ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை, பழக்க, வழக்கத்தின் பெயரால் அவற்றை கடைப்பிடிக் கின்ற அவலநிலை இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

அறிவியல்பூர்வமான சிந்த னைக்கும், பகுத்தறிவுக்கும் இட மளிக்காமல் பக்தி, பழக்க, வழக்கம், பழைமையின் பெயராலும், வேண் டுதல் நிறைவேறும் என்கிற மூடத் தனத்தாலும் அப்பாவி மக்கள் இதுபோன்று சாட்டையடிபட்டு பெரிதும் அவதிக்குள்ளாகின்றனர்.

வடமதுரை அருகே பாடியூர் இ.புதூரில் உள்ள பெரியகாண்டி யம்மன், அஜ்ஜப்பன், மகாமுனி கோவில்களில் ஆடித்திருவிழா என்கிற பெயரில் சிறப்பு பூஜைகள் செய்து அம்மன் சிலையை ஆற்றில் கரைத்தனராம். மேலும் வேண்டுதலின் பெயரால் பக்தர்கள் தலை யில் தேங்காயை கோவில் முன்பாக உட்கார்ந்திருந்த பக்தர்களின் தலை யில் ஒவ்வொரு தேங்காயாக பூசாரி உடைத்தாராம். அதன் பின்னர் கோவில் பூசாரி பக்தர்கள் அனைவரை யும் சாட்டையால் அடித்து ஆசி(?) வழங்கினாராம். இப்படி அடி வாங்கு கின்ற பக்தி தேவைதானா? என்று பொதுமக்கள் வேதனைப்பட் டனர்.

No comments:

Post a Comment