பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் கண்டு ஹிட்லரேகூட வெட்கப்படுவார் - சஞ்சய் சிங் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

பா.ஜ.க.வின் சர்வாதிகாரம் கண்டு ஹிட்லரேகூட வெட்கப்படுவார் - சஞ்சய் சிங்

 சண்டிகர், ஆக.27- பாஜகவின் சர்வாதிகாரத்தை கண்டு ஹிட்லரே கூட வெட்கப்படுவார் என ஆம்  ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங் காட்டமாக சாடி யுள்ளார். 

ஆம் ஆத்மி ஆட்சி செய்யும் பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மானுக்கும், ஆளுநர் பன்வாரிலால் புரோகித்துக்கும் பல்வேறு விஷயங்களில் கடுமையான மோதல் போக்கு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மாநில ஆட்சி நிர்வாகத்தில் குழப்பம் ஏற்படுத்தும் நோக்கில் ஆளுநர் பன்வாரிலால் ஆட்சி நிர்வாகம், சட்டம் ஒழுங்கு தொடர்பாக முதலமைச்சர் பகவந்த் மானுக்கு அடிக்கடி கடிதங்கள் எழுதினார்.

ஆனால் முதலமைச்சர் பகவந்த் மான் இந்த கடிதங்களை கண்டுகொள்ளவில்லை.  இந்நிலையில்,   மீண்டும்  கடிதம் எழுதிய ஆளுநர்,”என் கடிதங்க ளுக்கு முறையாக பதில் அளிக்காவிடில் முதலமைச்சர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், குடியரசுத் தலை வர் ஆட்சிக்கு பரிந்துரை செய்வேன்” என்றும் மிரட்டினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் பகவந்த் மான்,”3.5 கோடி பஞ்சாபியர்களை அவ மதிக்கும் வகையில் மாநிலத்தில் குடிய ரசுத் தலைவர் ஆட்சிக்கு பரிந்துரை செய்யப் போவதாக ஆளுநர் மிரட்டுகி றார். பஞ்சாபியர்களின் பொறுமையை சோதிக்க வேண் டாம்” என எச்சரித்தார். 

இந்நிலையில், ஆம் ஆத்மி மூத்த தலைவரும், மாநிலங்களவை எம்பியுமான சஞ்சய் சிங்கும் கடுமையாக சாடியுள்ளார். “பாஜகவின் இழிவான அரசியலால் மணிப்பூர் பற்றி எரிகிறது. ஆனால் அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தவில்லை. அரியானா மாநிலம் நூஹ், மேவாட்டில் வன்முறை சம்பவங்கள் சாதாரண சம்பவங்கள் போல நடக்கின்றன. அங்கும்  குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப் படவில்லை. கடந்த 2 ஆண்டுகளாக மக்க ளால் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாப் அரசின்  அனைத்து மசோதாக்களி லும் ஆளுநர்  கையெழுத்திட மறுக்கிறார். இல்லையென் றால் தள்ளுபடி செய்ய முயல்கிறார். ஆட்சி யில் குழப்பத்தை ஏற்படுத்த கடிதம் எழுதுகிறார். 

அந்த கடிதத்திற்கு பஞ்சாப் முதலமைச்சர்  பதிலளிக்கவில்லை என்றால் குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்துவோம் என மிரட்டல் விடுகிறார். உண்மையை சொன்னால் பாஜகவின் சர்வாதிகாரத்தை கண்டு ஹிட்லர் கூட வெட்கப் படுவார்". 

இவ்வாறு  சஞ்சய் சிங் கூறியுள்ளார்.


No comments:

Post a Comment