சென்னை, ஆக.29 - மூத்த குடிமக்க ளுக்கு பயன் அளிக்க கூடிய வகையில் 44 மாத ஃபிக்சட் டெபாசிட் திட் டத்தில் அதிக பட்சமாக 8.60 சதவீத வட்டியும், மற்றவர்களுக்கு 8.35 சதவீத வட்டியும் வழங்குவதாக வங்கி அல்லாத நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் தெரிவித் துள்ளது. இதுகுறித்து இந்நிறுவன முதலீ டுகள் பிரிவு செயல் துணைத் தலைவர் சச்சின் சிக்கா மேலும் கூறியிருப்பதாவது:
இந்நிறுவனம் 50 ஆயிரம் கோடி ரூபாய் ஃபிக்சட் டெபாசிட் பெற்று சாதனை படைத்துள்ளது.
எங்கள் வாடிக்கையாளர் களுக்கு சிறப்பான வட்டி விகி தத்தில் நீண்ட காலம் பயன் அளிக்கக் கூடிய சேமிப்புத் திட் டங்களை வழங்குவதில் அதிக கவனம் செலுத்தி வருகிறோம்.
இந்நிறுவனம் 7.3 கோடி வாடிக் கை யாளர்களைக் கொண்டுள்ளது. இதில் 4 கோடி வாடிக்கையாளர்கள் இதன் மொபைல் செயலியைப் பயன்படுத்துகிறார்கள். டிஜிட்டல் முறையில் தங்கள் பணத்தை டெபாசிட் செய்து வருவது குறிப் பிடத்தக்கது என அவர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment