திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்கு தமிழ்நாடு அரசால், “தகைசால் தமிழர்" விருது வழங் கப்படுவதறிந்து விஜிபி குழுமத் தலைவர் டாக்டர் வி.ஜி.சந்தோசம் வாழ்த்துத் தெரிவித்தார்.
வாழ்த்துச் செய்தியில் அவர் கூறியதாவது: தந்தை பெரியாரின் பாதையில் நடந்து, பகுத்தறிவுக் கொள் கையை நிலைநாட்டி வருபவரும், சிறந்த சமுதாய சேவகருமான கி.வீரமணி அவர்களின் தகுதியறிந்து, தகுதியான நேரத்தில் வழங்கப்படும் ”தகைசால் தமிழர்” விருது வழங்குவது மிகவும் போற் றத்தக்கதாகும். விருது வழங்கிய தமிழ்நாடு முதல மைச்சர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
தமிழர் தலைவருக்கு
மலேசிய திராவிடர் கழகம் வாழ்த்து
ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கு, தமிழ்நாடு அரசு "தகைசால் தமிழர் விருது" வழங்கி சிறப்பு சேர்த்து தந்தை பெரியார் தோற்றுவித்த திராவிடர் கழகத்திற்கு பெருமை சேர்த்துள்ளது.
தனது 90 - வயதிலும் இளைஞனைப்போல் உலகம் முழுவதும் கொள்கைப் பிரச்சாரத்தை மேற்கொண்டு பயணிப்பது அவ்வளவு எளிதல்ல.
தமிழுக்கு .'விடுதலை' நாளேட்டின் வழியும், திராவிடர்களுக்கு தந்தை பெரியார் அவர்களைத் தலைவராக ஏற்று, பிர்ச்சார பீரிங்கியாகவும் வலம் வரும் ஆசிரியர் அவர்களுக்கு " தகைசால் தமிழர் விருது " பொருத்தமான ஒன்றாகவே கருதுகிறேன்.
திராவிடர் கழகத்திற்கும், ஆசிரியர் அய்யாவுக்கும் கிடைத்த பெருமையாகவும் கருதுகிறோம்.
தமிழ்நாடு அரசுக்கு நன்றியையும், ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, வாழ்த்துகளையும், மலேசிய திராவிடர் கழகத்தின் தோழர்களின் சார்பிலும்
தெரிவித்துக் கொள்கிறேன்.
- டத்தோ.ச.த.அண்ணாமலை,
தேசியத் தலைவர், மலேசிய திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment