அழகு என்றால் என்ன சிவப்பா! கருப்பா!! இல்லை, "மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு" என்றார் பெரியார்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

அழகு என்றால் என்ன சிவப்பா! கருப்பா!! இல்லை, "மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு" என்றார் பெரியார்!

சட்ட மன்ற உறுப்பினர் சின்னத்துரை விளக்கவுரை

புதுக்கோட்டை ஆக. 5 புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தமிழ் மீனா திருமண மண்டபத்தில் பெரியாரியல் ஒருநாள் பயிற்சிப் பட்டறை நடந்தது. இந்த நிகழ்வின் நிறைவாக கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப் பினர் எம்.சின்னதுரை (இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி) கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் பேசுகையில்... எனது 35ஆண்டுகால அரசியல் வாழ்க்கை வர லாற்றில் எத்தனையோ பயிற்சிப் பட்டறை களில் கலந்து கொண்டிருக்கிறேன். பயிற்சி பெற்றிருக்கிறேன். பயிற்சிப் பட்டறைகளில் உரையாற்றி இருக்கிறேன். ஆனால், ஜாதி ஒழிக்க வேண்டும் என்பதற்கான பயிற்சிப் பட்டறையை, பயிற்சி வகுப்பை இப்போதுதான் பார்க்கிறேன். 

குறிப்பாக புதுக்கோட்டை திராவிடர் கழகத்தினர் ஏற்பாடு செய்த இந்த நிகழ்வைப் பார்க்கும்போது மிகுந்த வியப்படைகிறேன். அதற்காக பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்களை ஊக்கப்படுத்துவதையும் பரிசு கள் வழங்கிக் கவுரவிப்பதையும் மனதாரப் பாராட்டுகிறேன்.

கம்யூனிசத்தைப் பற்றி, கம்யூனிஸ்ட்டுகளின் கொள்கைகளைப் பற்றி தந்தை பெரியார்தான் முதன் முதலில் தனது குடிஅரசு இதழில் எழுதினார். கம்யூனிசம் என்ற வார்த்தையை பார்ப்பனர்கள் சொல்லக்கூடத் தயங்கிய காலம் அது. ஆனால் தந்தை பெரியார் அவர் கள் துணிச்சலாக எழுதினார்.

தந்தை பெரியாரைப் புறந்தள்ளி விட்டு, புறக்கணித்து விட்டு தமிழ்நாட்டு வரலாறை யாரும் எழுதிவிட முடியாது. அந்தளவுக்கு தமிழ்நாட்டு மக்களுக்கு, இந்த சமுதாயத்திற்கு உழைத்தவர் தந்தை பெரியார். அதேபோல் ஜாதி இருப்பதை எந்தக் காலத்திலும் அவர் ஏற்றுக் கொண்டதில்லை. கேரளாவிலும் கரு நாடகாவிலும்கூட இன்றும் ஜாதிகள் இருக் கின்றன. ஜாதியின் அடையாளத்தை பெயருக்குப் பின்னால் போட்டுக் கொள்ளும் வழக்கம் இருக்கிறது. இந்தியாவில் மற்ற மாநிலங்களிலும் இருக்கிறது. ஆனால், தமிழ் நாட்டில் அப்படி இருந்ததை கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் காட்டியவர் தந்தை பெரியார் அவர்கள். தமிழ்நாட்டில் இப்போதும் அங் கொன்றும் இங்கொன்றுமாக மட்டுமே இருக் கின்றது. அவற்றை ஒழிப்பதற்கு திராவி டர் கழகத்துடன் எங்களது பொதுவுடைமைத் தோழர்களும் இணைந்து நின்று போராடு வோம்.

தந்தை பெரியார் எடுத்த அரசியல் நிலைப் பாடுகளும் போராட்டங்களும் தமிழ்நாட்டை சிறந்த மாநிலமாக்கி இருக்கிறது. இந்திய அரசியல் வரலாற்றை தீர்மானிக்கும் மாநில மாக தமிழ்நாடு உருவாகி இருக்கிறது.

எது அழகு என்று கேட்டால் ‘‘மானமும் அறிவும் உடையவனே அழகானவன்'' என்று சொன்னவர் தந்தை பெரியார். அவரது கொள் கைகளை ஏற்று அதன் வழி நடப்பதே சாலச் சிறந்தது. அதன் வழியில் பயணிக்க இது போன்ற பயிற்சிகளை நடத்தும் திராவிடர் கழகத் தோழர்களுக்கும் இந்த பயிற்சிப் பட்டறையில் தங்களை கூர் தீட்டிக் கொள்ள வந்திருக்கும் இளைஞர்கள் மற்றும் இருபால் மாணவ மாணவியரையும் வாழ்த்துவதில் பெருமை கொள்கிறேன் என்று பேசினார். அவருக்கு நினைவுப் பரிசாக புத்தகம் மற்றும் பயனாடையை பெரியாரியல் பயிற்சிப் பட்ட றைப் பொறுப்பாளரும் மாநில ஒருங்கிணைப் பாளருமான தஞ்சை இரா.ஜெயக்குமார் வழங் கினார்.

No comments:

Post a Comment