பாபர் மசூதி விடயத்தில் விஜயராஜே சிந்தியா கூறியதை நம்பினார் நரசிம்மராவ் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

பாபர் மசூதி விடயத்தில் விஜயராஜே சிந்தியா கூறியதை நம்பினார் நரசிம்மராவ்

புத்தக விழாவில் நினைவு கூர்ந்தார் சரத்பவார்

புதுடில்லி, ஆக.11  பாஜக சார்பில் பங்கேற்று ராஜஸ்தான் மேனாள் முதலமைச்சர் விஜயராஜே சிந்தியா  நம்பிக்கை துரோகம் செய்தார், கொடுத்த உறுதிமொழியை மீறி பாபர் மசூதியை இடித்தனர் என்று. நூல் வெளியிட்டுவிழா ஒன்றில் பங்கேற்ற சரத்பவார் தகவல் வெளியிட்டுள்ளார்.

‘‘பிரதமர்கள் எப்படி முடிவெடுக் கிறார்கள்’ என்ற தலைப்பில் மூத்த பத்திரிகையாளர் நீர்ஜா சவுத்திரி எழுதிய புத்தகம்  எங்கு? எப்போது?  வெளியிடப்பட்டது. இதை தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், காங்கிரஸ் எம்.பி. சசிதரூர், மேனாள் ரயில்வே அமைச் சர் தினேஷ் திரிவேதி, மகாராட்டிர மேனாள் முதலமைச்சர் பிரித்விராஜ் சவான் ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். 

இந்நிகழ்ச்சியில் சரத் பவார் பேசுகையில் கூறியதாவது: கடந்த 1992-ஆம் ஆண்டு ராம்ஜென்ம பூமி இயக்கம் வேகம் எடுத்த போது, நான் பாதுகாப்புத்துறை அமைச்ச ராக இருந்தேன். 

இது தொடர்பாக சம்பந்தப் பட்ட கட்சித் தலைவர்களை அழைத்துப் பேச அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் முடிவு செய் தார். அந்த கூட்டத்தில் நான், அப் போதைய உள்துறை அமைச்சர் மற் றும் செயலாளர் ஆகியோர் இருந்தோம்.

அப்போது பாஜக சார்பில் பங்கேற்ற விஜய ராஜே சிந்தியா, பாபர் மசூதிக்கு எதுவும் ஆகாது என உறுதியளித்தார். எதுவும் நடக் கலாம் என உள்துறை அமைச்சரும், உள்துறைச் செயலாளரும் கூறினர். ஆனால் விஜயராஜே சிந்தியா கூறியதை நரசிம்மராவ் நம்பினார். அவர்கள் நம்பிக்கை துரோகம் செய்து விட்டனர். இவ்வாறு சரத் பவார் கூறினார். 

பத்திரிகையாளர் நீர்ஜா சவுத்ரி பேசுகையில், ‘‘பாபர் மசூதி இடிப்பு சம்பவத்துக்குப் பின், அப்போதைய பிரதமர் நரசிம்மராவைப் பத்திரி கையாளர்கள் சந்தித்தபோது, பாபர் மசூதி இடிக்கப்பட்ட போது அவர் என்ன செய்து கொண்டிருந் தார் என கேள்வி கேட்கப்பட்டது. தீராத காயத்துக்கு இது முடிவை ஏற்படுத்தும் என இச்சம்பவம் நடைபெற அனுமதித்ததாகவும், இது பாஜக.வுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் நினைத்த தாகவும் தெரிவித்தார்’’ என்றார். 

அய்க்கிய முற்போக்குக் கூட் டணி அரசில் ஒன்றிய அமைச்சராக பணி யாற்றிய பிரித்விராஜ் சவான் பேசுகையில்  பல ஊழல் குற்றச் சாட்டுகள் அதைப் பயன்படுத்தி அன்னா ஹசாரே இயக்கத்தைச் சரியாக கையாளாதது போன்றவை காங்கிரஸ் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்ததாகக் குறிப்பிட்டார்.

அவசர நிலை, இந்திரா காந்தி தோல்வியை சந்தித்தது, 1980-இல் மீண்டும் ஆட்சிக்கு வந்தது, ராஜீவ் எடுத்த முடிவுகள், மண்டல் கமிஷன் அறிக்கையை மேனாள் பிரதமர் வி.பி.சிங் அமல்படுத்தியது, மேனாள் பிரதமர்கள் வாஜ்பாய் மற்றும் மன்மோகன் சிங் காலத்தில் அரசுகள் எவ்வாறு செயல்பட்டன என்பது பற்றிய தகவல்கள் இந்த புத்தகத்தில் இடம் பெற்றுள்ளன என்று நூல் வெளியீட்டு விழாவில் சரத்பவார் தகவலை வெளியிட்டார்.


No comments:

Post a Comment