மும்பை கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் மேலும் சில கட்சிகள் : நிதிஷ்குமார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 28, 2023

மும்பை கூட்டத்தில் "இந்தியா" கூட்டணியில் மேலும் சில கட்சிகள் : நிதிஷ்குமார்

பாட்னா, ஆக.28 அடுத்த ஆண்டு நடக்கும் நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜனதாவை வீழ்த்துவதற்காக, 26 எதிர்க்கட்சிகள் இணைந்து 'இந்தியா' கூட்டணியை உருவாக்கி உள்ளன. 

அதன் முதல் கூட்டம், பாட்னாவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதியும், பெங்களூருவில் கடந்த மாதம் 17 மற்றும் 18-ஆம் தேதிகளிலும் நடந்தது. அடுத்த கூட்டம், வருகிற 31 மற்றும் செப்டம்பர் 1-ஆம் தேதிகளில் மும்பையில் நடக்கிறது. இந்நிலையில், எதிர்க்கட்சிகளை ஒன்று திரட்டுவதில் முக்கிய பங்கு வகித்த பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார், பாட்னாவில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.

 அப்போது அவர் கூறியதாவது:- மும்பையில் நடைபெற உள்ள 'இந்தியா' கூட்டணி கூட்டத்தில், நாடாளுமன்ற தேர்தலுக்கான கூட்டணியின் வியூகம் குறித்து விவாதிக்கப்படும். தொகுதி பங்கீடு உள்பட தேர்தல் தொடர்பான விவரங்களும் ஆலோசிக்கப்படும். கூட்டணியின் இதர செயல்திட்டங்கள் இறுதி செய்யப்படும். 

அந்த கூட்டத்தின்போது, கூட்டணியில் மேலும் சில அரசியல் கட்சிகள் இணையும். கூட்டணியில், எவ்வளவு அதிகமான கட்சிகளை சேர்க்க முடியுமோ, அவ்வளவு கட்சிகளை சேர்க்க விரும்புகிறேன். அந்த திசையில்தான் எனது பயணம் இருக்கிறது. மற்றபடி எனக்கென எந்த ஆசையும் இல்லை. இவ்வளவு அவர் கூறினார்.


No comments:

Post a Comment