இதுதொடர்பாகப் பேசிய அவர், "வளர்ச்சிக்கான காரணத்திற்காக ஆளும் அரசாங்கத்தில் ஒரு அங்கமாக இருக்க விரும்புகிறோம் என்று அவர் கள் கூறுவது உண்மையல்ல.. கடந்த காலங்களிலும் இது போன்ற மாற்றங் கள் இருந்திருக்கின்றன. எங்களது கட்சி உறுப்பினர்கள் சிலர் எங்களிட மிருந்து விலகி சென்றுள்ளனர்.
அவர்களுக்கு (அஜித் பவார் குழு) எதிராக ஒன்றிய அரசு அமலாக்கத் துறை விசார ணைக்கு உத்தர விட் டதால் அவர்கள் தேசிய வாத காங்கிரசில் இருந்து விலகியுள்ள னர். அவர்கள் தேசிவாத காங்கிரசிலிருந்து விலகி இன்னொரு கட்சி யுடன் (பாஜக) சேர அறிவுரை கூறப் பட்டிருக்கிறார்கள். அப்படி அவர்கள் சேரவில்லையென் றால் வேறு ஏதேனும் இடத்துக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்.
ஆனால், சிலர் அமலாக்கத் துறை விசாரணையை எதிர்கொள்ள துணிந் தனர். மேனாள் உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் 14 மாதங்கள் சிறையில் இருந்தார். அவரை தேசியவாத காங்கிர சில் இருந்து விலக வலியுறுத்தியும் அவர் எங்களது கட்சியுடன் உறுதி யோடு நின்றார்" என்று சரத் பவார் தெரிவித்தார்.
No comments:
Post a Comment