ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 30, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

30.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* தெலங்கானா மாநில காங்கிரஸ் கட்சி பிற்படுத்தப் பட்டோர், பட்டியல் இனம், பழங்குடிப் பிரிவினருக்கு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட அதிக இடங்களை ஒதுக்க முடிவு.

* அடுத்த ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற்றால் பாஜக பெரும் தோல்வியை சந்திக்கும் என்ற பயத்தில் வரும் டிசம்பர் மாதத்தில் பாஜக தேர்தலை முன்கூட்டியே நடத்த அதிக வாய்ப்பு என நிதிஷ் குமார் பேட்டி.

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தந்தை பெரியார், கனிமொழி எம்.பி. ஆகியோர் மீது அவதூறு பரப்பிய வழக்கினை தள்ளுபடி செய்திட எச்.ராஜா அளித்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

ஹிந்துஸ்தான் டைம்ஸ்:

* மக்கள் தொகை கணக்கெடுப்பில் ஓபிசிக்கு தனி பத்தி அமைத்திடுக, சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேந்திர பாகல் பிரதமருக்கு கடிதம்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* 'அதானி மெகா ஊழலின்' முழு அளவை ஜேபிசி விசாரணையால் மட்டுமே வெளி கொண்டு வர முடியும் என்றும், செபியின் நடவடிக்கை குறித்தும் காங்கிரஸ் கண்டனம்.

* தமிழ்நாட்டில் உள்ள மூன்று அரசு கல்லூரி பேராசிரியர்கள் மாணவர்களிடம் ஜாதிப் பாகுபாடு காட்டுவதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்

தி ஹிந்து:

* மதிய உணவு திட்டம் மூலம் தமிழ்நாடு வரலாறு படைத்தது. தமிழ்நாட்டில் மதிய உணவு திட்டத்திற்கு குறைந்தது 100 ஆண்டுகள் வரலாறு உண்டு என கட்டுரையாளர் ராமகிருஷ்ணன் புகழாரம்.

* தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற பயத்தின் காரணமாக மோடி அரசு கேஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்துள்ளது என எதிர்க்கட்சிகள் சாடல்.

தி டெலிகிராப்:

* குஜராத் அரசு உள்ளாட்சி அமைப்புகளில் ஓபிசியினருக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை அறிவித்துள்ளது

டைம்ஸ் ஆப் இந்தியா:

* ஜாதிவாரி கணக்கெடுப்பு ஆதரித்து தெலுங்கு தேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு அறிக்கை.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment