பாலவாக்கம், ஆக. 24- மணிப் பூர் மாநிலத்தில் பயங்கர வாதத்தைத் தூண்டி விட்டு, மக்களை எரிய விட்டு மகிழ்ந்து கொண் டிருக்கும் பாஜக மோடி அரசை கண்டித்து சோழிங்க நல்லூர் மாவட்ட திரா விடர் கழகத்தின் சார்பில் கண்டனப் பொதுக்கூட் டம் நடைபெற்றது.
7.8.2023 மாலை 6 மணிக்கு பாலவாக்கம் அண்ணா தெருவில் நடை பெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் ஆ.விஜய் உத்தமன் ராஜ் வரவே ற்புரையாற்றினார்.
மாவட்ட இளைஞ ரணி தலைவர் மு.நித்தி யானந்தம், செயலாளர் கே.தமிழரசன் ஆகியோர் முன்மொழிந்தும், வழி மொழிந்தும் உரையாற்றி னர்.
கழக சொற்பொழிவா ளர் தஞ்சை பெரியார் செல்வன், கழக துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் சிறப்புரையாற் றினர்.
இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில், தி.மு.க. தலைமைக்குழு உறுப்பினர் பாலவாக்கம் சோமு தொடக்க உரை யாற்றினார்.
மாவட்டக் கழக காப் பாளர் தி.இரா.இரத்தி னசாமி, சென்னை மண் டல இளைஞரணி தலை வர் இர.சிவசாமி, மாவட்ட மகளிரணி தலைவர் எஸ். தேவி சக்திவேல், துணைத் தலைவர் வேலூர் பாண்டு, துணைச் செயலாளர் தமிழினியன், மண்டல இளைஞரணி அமைப் பாளர் சண்முகப்பிரியன், மாவட்ட ப.க. தோழர் விடுதலை நகர் பி.சி. ஜெயராமன், மாவட்ட ப.க. தலைவர் கு.ஆனந் தன், செயலாளர் ஜெ. குமார், மாவட்ட அமைப் பாளர் டி.வி.கதிரவன், மாவட்ட இளைஞணி செயலாளர் த.தமிழரசன் முன்னிலை வகித்தனர்.
கலந்துகொண்ட கழக பொறுப்பாளர்கள்
ஈ.சி.ஆர். பகுதி மனித நேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எம்.கே.ஜே.அஸ்மத், சேலையூர் ராகுல், பெரியார் பிஞ்சு பொற்செழியன் சக்தி வேல், தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத் திகன், தென்சென்னை மாவட்ட துணைத் தலை வர் அ.ப.நிர்மலா, துணைச் செயலாளர் அரும்பாக் கம் சா.தாமோதரன், ஆவடி மாவட்ட துணை செயலாளர் க.தமிழ்ச் செல்வன், தாம்பரம் நகர செயலாளர் கு.மோகன் ராஜ், மாவட்ட தொழி லாளரணித் தலைவர் ம.குணசேகரன், சந்திர சேகர், தாம்பரம் மாவட்ட கழகப் பொருளாளர் கு. இராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
கண்டனக் கூட்டதில் பங்கேற்ற சிறப்புரையா ளர்களுக்கும், சிறப்பு அழைப்பாளர்களுக்கும் பயனாடை அணிவித்து சிறப்பிக்கப்பட்டது.
கழகக் கொடிகள் சிறப்பான முறையில் கட்டப்பட்டிருந்தன.
ஈ.சி.ஆர். பகுதியைச் சேர்ந்த தோழர் இப்ராகிம் குடிதண்ணீர் பாட்டில்களை வழங்கினார். அனைத்துத் தோழர்களுக்கும் மாவட்ட கழகம் சார்பாக இரவு உணவு வழங்கப் பட்டது.
மாவட்ட கழக அமைப்பாளர் பி.வி.கதிர வன் நன்றி கூறிட கூட் டம் முடிவுற்றது.
No comments:
Post a Comment