நிகழ்வுக்கு காரைக் குடி மாவட்ட கழக தலைவர் ச அரங்கசாமி, மாவட்ட கழக செயலா ளர் ம.கு. வைகறை, மாவட்ட ப.க தலைவர் விஞ்ஞானி சு.முழுமதி, மாவட்ட ப.க செயலாளர் ந .செல்வராசன், மாவட்ட கழக அமைப்பாளர் சி செல்வமணி, பகுத்தறிவு ஆசிரியர் அணி மாவட்ட அமைப்பாளர் த.பால கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ப.க துணைத் தலைவர் சு. சு.ராஜ்குமார் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
கலந்துரையாடலை சிறப்பாக ஒருங்கிணைத்த தோழர் ஓ. முத்துக்குமார் தனது தலைமை உரை யில், இது நாள் வரை தான் ஆற்றி வந்த சமூக நலப் பணிகளையும் கல்வி சார்ந்த அறிவியல் நிகழ்வுகளையும், சென்ற ஆண்டு 165 மாணவர்களை பங்கேற்க வைத்த பெரியார் ஆயிரம் போட்டித் தேர்வு குறித்தும், புதிய உறுப்பினர்களை சேர்ப் பது குறித்தும் உரையாற் றினார்.
நிகழ்வின் தொடக்கத் தில் பெரியார் பிஞ்சுக ளின் விளையாட்டுப் போட் டிகள் நடத்தப்பட்டன.
அரங்கத்தில் மாணவர்களின் பார்வைக்காக வானியல் தொலைநோக்கி காட்சிப் படுத்தப்பட்டிருந்தது.
ஒன்றிய பகுத்தறிவா ளர் கழகம் தொடங்கப் பட்டதன் மகிழ்வாக பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா தமிழ்ச் செல்வன், பொதுச் செயலாளர் வி.மோகன், மாநில துணைத்தலைவர் அ.சரவணன் ஆகியோர் மரக்கன்று நட்டனர்
நிகழ்வில் சிறப்பு விருந் தினராக பங்கேற்ற பகுத் தறிவாளர் கழக மாநிலத் தலைவர் இரா. தமிழ்ச் செல்வன் உரையாற்றினார்.
தொடர்ந்து உரை யாற்றிய பொதுச்செயலா ளர் வி. மோகன், பகுத்தறி வாளர் கழகத்தை தந்தை பெரியார் தொடங்கிய வரலாற்று செய்தியினை யும், பகுத்தறிவாளர் கழக புரவலர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் எதிர்பார்ப்பை இன்றைய கலந்துரையாடல் கூட் டம் நிரூபித்து இருக்கிறது என்றும் அமைப்பின் நோக்கங்கள் குறித்தும் வழிகாட்டுதல் உரை வழங்கினார். மாநில துணைத்தலைவர் அ. சர வணன் அமைப்பின் செயல்பாடுகளையும், எதிர்கால திட்டங்களை யும் எடுத்துரைத்தார். விளையாட்டு போட்டிக ளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக ளும் பெரியார் பிஞ்சு, உண்மை இதழ்கள் வழங் கப்பட்டன. சுமார் 75 பேர் பங்கேற்றனர். புதிய பொறுப்பாளர்களுக்கு மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் பய னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது.
பங்கேற்று உரையாற் றியோர் மாவட்ட கழக துணை தலைவர் கொ. மணிவண்ணன், கோட்டை ஒன்றிய செயலாளர் அ .ஜோசப் தேவகோட்டை ஒன்றிய பக தலைவர் கவிக்கோ அ.அரவரசன், தேவகோட்டை நகர கழக தலைவர் முருகப் பன், காரைக்குடி நகர தலைவர் ந. ஜெகதீசன், தொழிலாளர் அணி மாவட்ட செயலாளர் சொ .சேகர், காளையார் கோயில் ஒன்றிய கழக தலைவர் அழகர்சாமி, காளையார்கோவில் ஒன்றிய கழக செயலாளர் சோமன் மற்றும் சமூக நல தோழர்கள், ஆசிரியர் கள், பெண்கள், மாணவர் கள் கலந்து கொண்டனர். காளீஸ்வரன் நன்றி கூறி னார்.
பெரியார் தெளித்த விதைகள் எங்கும் முளைக் கும், என்றும் செழிக்கும் என்பதை காளையார் கோயில் ஒன்றிய பகுத்தறி வாளர் கழக கலந்துரை யாடல் பறைசாற்றியது.
பகுத்தறிவாளர் கழக புதிய பொறுப்பாளர்கள்:
காளையார் கோயில் ஒன் றியத் தலைவர்: ஜோ.ரஞ்சன்
ஒன்றிய செயலாளர்: சா.ஜெரோம்
ஒன்றிய அமைப்பாளர்: ர.ராஜா
ஒன்றிய துணைத் தலை வர் : அன்பு
ஒன்றிய துணைச் செயலாளர்: ராஜேஷ்,
நகரத் தலைவர்: வி. ஆல்பர்ட் ஜான்சன்
நகரச் செயலாளர்: மு. அசோக் குமார், நகர அமைப் பாளர்: இராமநாதன்,
ஒன்றிய ஆசிரியர் அணி தலைவர்: மு. காளீஸ்வரன்
ஒன்றிய ஆசிரியர் அணி செயலாளர்: அலெக்சாண்டர் துரை
ஒன்றிய ஆசிரியர் அணி அமைப்பாளர்: பாண்டி.
No comments:
Post a Comment