தஞ்சை புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர். நகரில் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

தஞ்சை புதிய பேருந்து நிலையம் ஆர்.ஆர். நகரில் கழக தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்

தஞ்சை,ஆக.3- தஞ்சை மாநகரம், புதிய பேருந்து நிலையம் பகுதி திராவி டர் கழகம் சார்பில் ஆர்.ஆர்.நகரில் வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழறிஞர் கலைஞர் நூற் றாண்டு விழா, திராவிடல் மாடல் ஆட்சி விளக்க தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது.

தஞ்சை மாநகர துணைத் தலைவர் செ.தமிழ்செல்வன் தலைமையேற்று உரையாற்றினார்.

தஞ்சை தெற்கு ஒன்றிய தலைவர் இரா.சேகர், செயலாளர் நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம். தஞ்சை மாநகர செய லாளர் கரந்தை அ.டேவிட், மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்க டேசன், தஞ்சை மாநகர துணைச் செய லாளர் இரா.இளவரசன் ஆகியோர் முன் னிலையேற்று சிறப்பித்தனர்.

தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி, தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், மாநில கலைத்துறை செயலாளர் ச.சித்தார்த்தன், மாநில ப.க. துணைத் தலைவர் கோபு.பழனி வேல், திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா.செந்தூரபாண்டியன், தலைமை கழக அமைப்பாளர் குடந்தை க.குருசாமி, கழக ஒருங்கிணைப்பாளர் தஞ்சை இரா.ஜெயக்குமார் ஆகியோர் கருத்துரையாற்றினர்.

தஞ்சை மாவட்ட தலைவர் சி.அமர் சிங் தொடக்கவுரையாற்றினார்.கழகப் பேச்சாளர் இரா.பெரியார் செல் வன், 100 ஆண்டுகளுக்கு முன் வைக்கத்திலே நடைபெற்ற ஜாதிக் கொடுமையை எதிர்த்து நடைபெற்ற போராட்ட வரலாறுகளை எடுத்துக் கூறி வைக்கம் போராட்ட நூற்றாண்டை நினைவுபடுத்தி உரையாற்றி னார். அறிஞர் அண்ணா ஆட்சி காலம் தொடங்கி முத்தமிழ் அறிஞர் கலைஞர் வரையும் இன்றைக்கு இந்தியாவிலேயே எடுத்துக்காட்டான ஆட்சியை நடத் திக் கொண்டிருக்கும் முத்துவேல் கரு ணாநிதி ஸ்டாலின் ஆட்சி வரை தமிழ் நாடு பெற்றிருக்கும் வளர்ச்சிக்குக் கார ணம் "திராவிட மாடலே" என்பதை வலி யுறுத்தி எழுச்சிகரமான சிறப்புரை நிகழ்த்தினார்.

புதிய பேருந்து நிலைய பகுதி செயலா ளர் முனைவர் சவுந்தர்ராஜன் அனைவரை யும் வரவேற்று உரையாற்றினார். புதிய பேருந்து நிலைய பகுதி தலைவர் சாமி.கலைச்செல்வன் இறுதியாக நன்றியுரையாற் றினார்.

இந்நிகழ்வின் தொடக்கத்தில் பேரா. க.சுடர்வேந்தன் மந்திரமா? தந்திரமா? எனும் மூடநம்பிக்கை ஒழிப்பு அறிவியல் விளக்க நிகழ்ச்சியை நடத்தினார்.

திராவிடர் கழக மாநில ஒருங் கிணைப் பாளர், இரா.குணசேகரன், மாநில வீர விளையாட்டு கழக செயலாளர் நா.இராம கிருஷ்ணன், மாநில இளைஞரணி துணை செயலாளர்கள் இரா.வெற்றிக்குமார், முனைவர் வே.இராஜவேல், மாவட்ட துணை செயலாளர் அ.உத்திராபதி, மாவட்ட ப.க. தலைவர் ச.அழகிரி, மாவட்ட ப.க. செயலாளர் பாவலர் பொன்னரசு, மாவட்ட ப.க. அமைப்பாளர் குழந்தை கவுதமன், கழகப் பேச்சாளர் பூவை.புலிகேசி, மேனாள் மாவட்ட கல்வி அலுவலர் சாமி நாதன், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் ச.சந்துரு, மாவட்ட பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் கு.குட்டிமணி, உரத்தநாடு ஒன்றிய தலைவர் த.ஜெகநா தன், உரத்தநாடு ஒன்றிய செயலாளர் மாநல்.பரமசிவம், அம்மாபேட்டை ஒன்றிய செயலாளர் செ.காத்தையன், உரத்தநாடு கிழக்கு பகுதி செயலாளர் துரை.தன்மானம், பகுத்தறிவாளர் கழக தோழர் தங்க.வெற்றிவேந்தன், ஒன்றிய இளைஞரணி தலைவர் ஆ.பிரகாஷ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் இர.மகேந்திரன், மருத்துவக் கல்லூரி பகுதி செயலாளர் கோவிந்தராஜ், நகர ப.க. தலைவர் இரா.வீரக்குமார். கரந்தை பகுதி தலைவர் விஜயன், கழகத் தோழர் கள் அழகு.இராமகிருஷ்ணன், திரா விடச்செல்வன், பொறியாளர்கள் ஏழு மலை, பாலகிருஷ்ணன், இளைஞரணி தோழர் ஆ.யோவான்குமார், விசிறி சாமி யார் முருகன், படிப்பக உறுப்பினர்கள் கு.முருகானந்தம், குழந்தை சாமி மற்றும் கழக பொறுப்பாளர்கள் தோழர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில், உலக பாவலர் தமி ழன்னை தமிழ் பேரவை அமைப்பின் சார்பில் வழங்கப்பட்ட தந்தை பெரி யார் விருதினை பெற்றிருக்கும் தஞ்சை மாநகர தலைவர் பா.நரேந்திரன், 

தஞ்சை ஹெரிடேஜ் ரோட்டரி சங்கத்தின் தலைவராக பொறுப்பேற்றுள்ள தஞ்சை மாநகர துணைத் தலைவர் வன்னிப் பட்டு செ.தமிழ்ச்செல்வன், 01.08.2023 அன்று இருபதாவது மண நாள் காணும் தஞ்சை மாவட்ட செயலாளர் அ.அருணகிரி ஆகியோருக்கு வாழ்த்துகள் கூறி பய னாடை அணி வித்து சிறப்பிக்கப்பட்டது.

No comments:

Post a Comment