புதுடில்லி, ஆக. 11- அகில இந்திய பிற் படுத்தப்பட்டோர் கூடடமைப் பின் சார்பில் டில்லியில் நாடாளு மன்ற அரசமைப்பு கிளப் அவைத் தலைவர் அரங்கில் கடந்த 10.8.2023 சமூக நீதி கருத்தரங்கம் நடை பெற்றது.
கருத்தரங்கில் பங்கேற்ற பேரா ளர்கள் அனைவரும் பிற்படுத்தப் பட்டோர் நலனில் ஒன்றிய அரசு கிடப்பில் போட்டுள்ளவற்றை செய்து முடிக்க வலியுறுத்தினர்.
அகில இந்திய பிற்படுத்தப் பட்டோர் கூட்டமைப்பின் செயல் தலைவர் யு.சின்னய்யா தலைமை யில், பொதுச்செயலாளர் கோ.கரு ணாநிதி அறிமுக உரையாற்றினார்.
நாடாளுமன்ற மேனாள் உறுப் பினர் வி.அனுமந்தராவ், நாடாளு மன்ற உறுப்பினர்கள் பி.வில்சன், கிரிதாரி, பி.லிங்கய்யா கருத்தரங்க உரையாற்றினர்.
கருத்தரங்கில் ஜாதிவாரி கணக் கெடுப்பு, கிரீமி லேயர் நீக்கம், பதவி உயர்வு மற்றும் நீதித்துறையில் இடஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல் வேறு நிலைகள்குறித்து வலியுறுத் தப்பட்டன.
தேசிய பிற்படுத்தப்பட்டோர் நல ஆணையத்தின் உறுப்பினர் புவன் பூஷன் காமல் நிறைவு உரையாற்றினார். அவர் உரையில், மருத்துவ இடங்களில் அனைத் திந்திய ஒதுக்கீட்டிலும், கேந்திரிய வித்யாலயா, சைனிக் பள்ளிகளில் இடஒதுக்கீடு வழங்கப்பட வேண் டும் ஆகியவற்றை வலியுறுத்தியும், தேசிய பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்துக்கு அரசமைப்பு அதி காரம் வழங்கப்பட்டதற்கு கூட்ட மைப்பின் சார்பில் எடுக்கப்பட்ட முயற்சிகள் மற்றும் பிற்படுத்தப் பட்டவர்களின் நலனில் கூட்ட மைப்பின் செயல்பாடுகளை வெகு வாக பாராட்டியும் பேசினார். கூட்டமைப்பு எடுக்கின்ற அத் துணை முயற்சிகளுக்கும் ஆதர வாக இருப்பதாகவும் உறுதியளித் தார்.
பல்வேறு மாநிலங்களிலிருந்து வருகைதந்து கருத்தரங்கில் பங் கேற்ற கூட்டமைப்பின் பொறுப் பாளர்கள், கூட்டமைப்புக்கு உறு துணையாக நின்று ஆதரவளிக்கும் பிற அமைப்புகளின் தலைவர்களும் கருத்தரங்கில் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment