சென்னை மாநகர நவீன கட்டுப்பாட்டு அறை பெண் தலைமைக் காவலர் ஹெப்டத் லான் பிரிவில் தங்கம் உள்ளிட்ட 3 பதக்கங் களை பெற்று சாதனை படைத்துள்ளார். கனடா நாட்டில் உலக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறை வீரர்களுக்கான தடகள போட்டி கடந்த 28ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் (6.8.2023) வரை நடந்தது. இந்த போட்டியில் தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவலர்கள் பலர் கலந்துகொண்டனர். அதில், குறிப்பாக சென்னை மாநகர காவல்துறையில் நவீன கட்டுப்பாட்டு அறையில் பணியாற்றி வரும் தலைமை காவலர் லீலா போட்டியில் கலந்து கொண்டார்.
இவர், 7 போட்டிகள் கொண்ட ஹெப்டத் லான் பிரிவில் தங்கப் பதக்கமும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் வெள்ளிப் பதக்கமும், உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப் பதக்கம் என 3 பதக்கங்கள் பெற்று தமிழ்நாடு காவல் துறைக்கு பெருமை சேர்ந் துள்ளார். இவருக்கு தமிழ்நாடு காவல்துறை சார்பில் காவல்துறை அதிகாரிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment