"தகைசால் தமிழர்" விருது பெறவிருக்கும் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகப் பணியாளர் நல மன்றம் சார்பில் பாராட்டு விழா
வல்லம், ஆக. 4 - பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர்" விருது பெறவிருக்கும் திராவிடர் கழக தலைவர் மற்றும் இந்நிகர் நிலைப்பல் கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்க ளுக்கு சிறப்பான பாராட்டு விழா நடைபெற்றது. ஏற்புரை யாற்றிய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்கள் தகைசால் தமிழர் விருதுபெற்றமைக்கு வாழ்த்துகளை தெரிவித்த மைக்கு நன்றி தெரிவித்தார்.
வேந்தர் உரை
பெரியாரின் தொண்டனா கிய நான் எனக்கு அளிக்கப் பட்ட தகைசால் தமிழர் விருது பெற்றமைக்கு நான் பெருமைப் படுகிறேன். பல்கலைக்கழகத் தின் பணியாளர் நல மன்றம் இந்த நிகழ்ச்சியை சிறப்பாக செய்திருப்பது மட்டற்ற மகிழ்ச்சி அளிக்கின்றது. பல்கலைக்கழகத்தின் நிர்வாக வச திக்காக அதிகார அடுக்குகள் இருக்கலாம். ஆனால், பணியா ளர் நல மன்றத்தில் வேந்தர், துணைவேந்தர், பதிவாளர், புலத் தலைவர், துறைத்தலைவர், பேராசிரியர்கள், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் பணி யாளர்கள் என எந்தப் பேதமும் இல்லை. எல்லோரும் இங்கு கூட்டுப் பணிதோழர்களே. இங்கு பணிபுரிபவர்கள் ஊதி யத்தை மட்டும் கருதி பணி யாற்றவில்லை. இலட்சியத் தோடு அர்ப்பணிப்பு உணர் வோடு பணியாற்றுகிறார்கள். ஒரு கல்வி நிறுவனத்தில் பல் கலைகழகத்தின் பெருமை என் பது கட்டடங்களால் மட்டும் அமைவதில்லை. அங்கு பயிலும் மாணவர்களாலும், பேராசிரியர்களாலும் மட் டுமே சிறப்படைகிறது.
உலகின் பல நாடுகளில் நம் பல்கலைக்கழகத்தில் பயின்ற மாணவர்கள் பலர் உயர் பதவியில் பணியாற்றுகிறார் கள். அவர்களை நாம் சந்திக் கின்ற போது நாம் பெரும் மகிழ்ச்சியடைகின்றோம். கல்வி அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்று பெரியார் பெரிதும் விரும்பினார். கல்வி பயிலுவதற்கு இடமில்லாமல் மாணவர்கள் தவிர்த்தபோது தந்தை பெரியார் அவர்கள் திருச்சியில் பெரியார் அரசினர் கலைக்கல்லூரி நிறுவதற்காக ரூபாய் அய்ந்தரை லட்சம் அன்பளிப்பாக வழங்கினார்.
மாணவர்களிடம், பேராசி ரியர்கள் தன்னம்பிக்கையை விதைக்கவேண்டும், அவர் களை சோர்வடையச் செய் யக்கூடாது - ஊக்கப்படுத்த வேண்டும். நான் பல்கலைக் கழகத்தில் படித்தபோது முத லில் எனக்கு பாடங்கள் புரியா மல் இருந்தது. படிப்பை விட்டு விட்டுப் போய்விடலாமா என்ற எண்ணம் கூட இருந்தது. அப்படிப்பட்ட மாணவர்க ளுக்கு துணிவையும், தன்னம் பிக்கையும் ஊட்ட வேண்டியது பேராசிரியர்களின் தலையாய கடமையாகும். மாணவர்க ளுக்கு உள்ள தனித்திறமையை வெளிக்கொணர்வது ஆசிரியர்களின் பணியாகும். மாணவர்களிடம் எப்போதும் அன்பு காட்டுங்கள், கண்டிப்பு காட்டவேண்டிய நேரத்தில் மிகவும் கண்டிப்பாக இருங்கள். எல்லோரையும் வாழ்த்துங்கள் குறைகளை பெரிதுப்படுத்தா தீர்கள். புதிய கல்வியாண்டில் பயிலும் மாணவர்களை சான் றோன் ஆக்குங்கள்" என்று கூறி ஏற்புரையை நிறைவு செய்தார்.
விழாவிற்கு தலைமை வகித்த பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் செ.வேலுசாமி உரையாற்றும் போது ""நான்மணிக்கடிகை என்னும் தமிழ் இலக்கியம் இந்த தகைசால் என்ற சொல் லிற்கு பண்பிற் சிறந்த என்ற பொருள் தருகிறது. பல்கலைக் கழகத்தின் வேந்தர் அவர்கள் பண்பிற் சிறந்தவர் என்று பாராட்டிப் பேசினார். "தகை சால் தமிழர்" விருதினை தமிழ் நாடு அரசு 2021 ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. முதல் விரு தினை நூறு வயதிற்கு சொந்தக் காரர் தியாகி சங்கரய்யா அவர்களுக்கும், மேலும் 2022 ஆம் ஆண்டிற்கான விருதினை 97 வயதிற்கு சொந்தக்காரர் நல்லகண்ணு அவர்களுக்கும் இவ்விருதினை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது. 90 வயது நிறை வடைந்த நம்முடைய வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு 2023 ஆம் ஆண்டிற்கான விருதினை தமிழ்நாடு அரசால் இவ்விருது வழங்கப்படவுள்ளது. அதற்கு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன் என்றார்.
"தகைசால் தமிழர்" விருது பெற்ற இப்பல்கலைக்கழகத்தின் வேந்தர் டாக்டர் கி.வீரமணி அவர்களுக்கு இவ்விருது வழங்கியது மிக பொருத்தமாகும் என்று இப்பல்கலைக்கழக நிதித்துறை ஆலோசகர் பழனி ராஜன் வாழ்த்துரை வழங்கினர்.
விழாவில் இப்பல்கலைக்கழ கத்தின் பதிவாளர் பேராசிரியர் பி.கே.சிறீவித்யா வரவேற்புரை நிகழ்த்தினார் மற்றும் பணியாளர் மன்றத்தின் தலைவர் பேராசிரியர் கதிரவன் நன்றியு ரையினை தெரிவித்தார்.
No comments:
Post a Comment