உல்லியக்குடி பெ.வைத்தியலிங்கம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 13, 2023

உல்லியக்குடி பெ.வைத்தியலிங்கம் மறைவு கழகப் பொறுப்பாளர்கள் இறுதி மரியாதை

அரியலூர், ஆக. 13 - அரியலூர் மாவட்டம் உல்லியக்குடி கிராமத்தைச் சார்ந்த, ஆவடி மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் வை. கலையரசனின் தந்தையார் பெ. வைத்திலிங்கம் (வயது 87)அவர்கள் 10 .8. 2023 அன்று உல்லியக் குடியில் மறைவுற்றார்.

செய்தியறிந்த - கழக ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், மாநில மாணவர் கழகச் செயலாளர் இரா. செந்தூர் பாண்டியன், தலைமைக் கழக அமைப்பாளர் க. சிந் தனைச் செல்வன்,அரியலூர் மாவட்ட தலைவர் விடு தலை நீலமேகன், காப்பாளர் சு. மணிவண்ணன், மாவட்டத் துணைச் செயலாளர் மா.சங்கர், மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் தா.மதியழகன், தா.பழூர்ஒன்றிய தலைவர் சிந்தாமணி ராமச்சந்திரன், ஒன்றிய செயலாளர் பி. வெங்கடாசலம், மாவட்ட ப.கஆசிரியரணி அமைப்பாளர் இரா. ராஜேந்திரன், உல்லியக்குடி சிற்றரசு, கார்குடிசூரிய நாராயணன், செந்துறை ஒன்றிய தலைவர் மு. முத் தமிழ் செல்வன், இளைஞரணி தலைவர் மு. ரஜினி காந்த், உல்லியக் குடிசங்கர் அப்பாசாமி, விஜய், தாம்பரம் மாவட்ட திராவிடர் கழக மகளிர் அணி தலைவர் இறைவி, பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் செந்தில்குமாரி, ஆவடி மாவட்ட துணைச் செயலாளர் உடுமலை வடிவேல், ஆவடி மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் க.கார்த்திகேயன், கலைமணி, தென் சென்னை மாவட்ட திராவிட மகளிர் பாசறை தலைவர் மு.பவானி, திருமுல்லைவாயில் பகுதி திராவிடர் கழக செயலாளர் ரவீந்திரன், ஆவடி மணிகேலை, ரவீந் திரன் உள்ளிட்டப் பொறுப்பாளர்கள் மறைந்தவரின் உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செய்தனர். ஆசிரியர் அவர்களின் இரங்கல் செய்தி வழங்கப் பட்டது. 


No comments:

Post a Comment