நிலங்­க­ளின் வழி­காட்டி மதிப்பை சீர­மைக்க மதிப்­பீட்­டுக் ­குழு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

நிலங்­க­ளின் வழி­காட்டி மதிப்பை சீர­மைக்க மதிப்­பீட்­டுக் ­குழு!

சென்னை, ஆக.20 - தமிழ்­நாட்­டில் வழி­காட்டி மதிப்­பு­கள் விவ­சாய நிலங்களுக்கு ஏக்­க­ரி­லும், மனை நிலங்­க­ளுக்கு சது­ர­டி­யி­லும் நிர்­ணயம் செய்யப்­ப­டுகி­றது. இவ்­வாறு நிர்­ண­யம் செய்­யப்­பட்ட வழிகாட்டி மதிப்­பு­கள் பெரும்­பா­லான இடங்­க­ளில் வெளிச்­சந்தை மதிப்பை விட மிக மிக குறை­வாக உள்­ளன. என­வே­தான் 1.4.2023 முதல் ஏற்கெனவே, அதா­வது 8.6.2017 அன்று இருந்த வழி­காட்டி மதிப்­பிற்கு மாற்றியமைக் கப்­பட்­டது.

மனை­யி­டங்­க­ளின் வழி­காட்டி மதிப்பு மிக மிக குறை­வாக இருந்­த­தால் வங்கிக­ளில் சொத்­தின் மதிப்­பிற்கு ஏற்­றாற்­போல் கடன் பெற முடி­ய­வில்­லை­யென 27.7.2023 அன்று நடை­பெற்ற பதி­வுத்­துறை கருத் ­துக் கேட்பு கூட்­டத்­தில் கட்­ட­டம் கட்டி விற்­போர் சங்­கப் பிர­தி­நி­தி­க­ளும், மனைப்­பி­ரிவு ஏற்­ப­டுத்தி விற்­போர் சங்­கப் பிர­தி­நி­தி ­க­ளும் தெரி­வித்­த­னர். 

எனவே, மனை­யி­டங்­க­ளின் வழி­காட்டி மதிப்பு உயர்த்­தப்­பட வேண்­டும் என்று ஏக­ம­ன­தாக கோரிக்கை வைத்­த­னர். மேலும் விளைநில மதிப்­பும் சில இடங்களில் மிக மிக குறை­வாக உள்­ள­தாக தெரி­விக்­கப்­பட்­டது.

இந்­திய முத்­தி­ரைச் ­சட்டம் பிரிவு 47(கிகி)இன்படி பதி­வுத்­துறை தலை­வர் தலைமை­யில் வழி­காட்டி மதிப்பை சீர­மைக்க மய்ய மதிப்பீட்­டுக்­குழு அமைக்கப்­பட்­டுள்­ளது. 

இக்­கு­ழு­வில் ஆணை­யர் (நகர ஊர­மைப்பு இயக்­கம்), முதன்மை பொறி­யா­ளர் (கட்­ட­டம்) பொதுப்­ப­ணித்­துறை, இணை ஆணை­யர்(நில நிர்­வா­கம்), ஆணையர் (நக­ராட்சி நிர்­வா­கம்), இயக்­கு­நர் (பேரூ­ராட்சி), இயக்­கு­நர், (ஊரக வளர்ச்சி), ஆணை­யர் (நில அளவை மற்­றும் பதி­வே­டு­கள்), பிர­தி­நிதி -(சென்னை மாந­கர வளர்ச்சி குழு­மம்), துணை ஆணை­யர் (சென்னை மாநகராட்சி), பிர­தி­நிதி (வரு­மான வரித்­துறை), முதன்மை பொறி­யா­ளர் (நீர்­பா­ச­னம்) பொதுப்­ப­ணித்­துறை, கூடு­தல் பதி­வுத்­துறை தலை­வர் (வழி­காட்டி), பிர­தி­நிதி (மதிப்­பீட்­டா­ளர் சங்­கம்), பிர­தி­நிதி (தமிழ்­நாடு தொழில் மற்­றும் வர்த்­தக கூட்­ட­மைப்பு) ஆகி­யோர் உறுப்­பி­னர்­க­ளாக உள்­ள­னர்.

மய்ய மதிப்­பீட்­டுக்­குழு 16.08.2023 அன்று கூடி இது­ குறித்து விரி­வாக விவாதிக்கப்­பட்டு அந்­தந்த மாந­க­ராட்சி, நக­ராட்சி, கிரா­மப் பகு­தி­க­ளில் உள்ள மனை­யி­டங்­க­ளுக்கு குறைந்­த­பட்ச மதிப்பு நிர்­ண­யம் செய்­யப்­பட்­டது. இந்த குறைந்­த­பட்ச மதிப்பை விட குறை­வாக கொண்­டுள்ள தெரு/சர்வே எண்க­ளுக்கு மட்­டுமே இம்­ம­திப்பு மாற்­றி­ய­மைக்­கப்­பட்­டது. அனைத்து தெரு/சர்வே எண்­க­ளுக்­கும் வழி­காட்டி மதிப்­பா­னது மாற்­றி­ய­மைக்­கப்­ப­ட­வில்லை.

எனவே, ஒரு சில ஊட­கங்­க­ளில் முன்­ன­றி­விப்­பின்றி வழி­காட்டி மதிப்பு உயர்த்தப்­பட்­டுள்­ளது என்று வந்­துள்ள செய்தி தவ­றான செய்தி ஆகும். 

தற்­போது நிர்­ண­யிக்­கப்­பட்­டுள்ள குறைந்­த­பட்ச வழி­காட்டி மதிப்­பா­னது  http://tnreginet.gov.in என்ற பதி­வுத்­து­றை­யின் இணை­ய­த­ளத்­தில் பொது­மக்­க­ளின் பார்­வைக்­காக மேலேற்­றம் செய்­யப்­பட்­டுள்­ளது.

-இவ்­வாறு பதி­வுத்­துறை தலை­வர் தெரி­வித்­துள்­ளார்.

No comments:

Post a Comment