பழனி, ஆக. 23- பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் கோசாலைக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங் கிய 17 பசுக்கள் போதிய தீவனங் களின்றி உயிரிழந்ததால் பசுக்களின் நிலைக் குறித்து வழக்குரைஞர் ஆணையர் கள ஆய்வு செய்து, அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மது ரைக் கிளை நேற்று (22.8.2023) உத் தரவிட்டது.
பழனியைச் சேர்ந்த ராமசாமி தாக்கல் செய்த மனு: திண்டுக்கல் மாவட்டம், பழனியில் முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான தண்டாயுதபாணி சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயி லுக்கு பக்தர்கள் பொருள்கள், நிலங் கள், பணம், நகைகள் மட்டுமன்றி, பசுக்களையும் கொடையாக வழங்கி உள்ளனர். இந்தப் பசுக்கள் கோயிலுக்குச் சொந்தமான கோசாலையில் பராமரிக்கப்பட்டு வருகின்றன. மேலும், இந்தப் பசுக் களைப் பாதுகாக்கவும், பராமரிக்க வும் பணியாளர்கள், மருத்துவர்கள் நியமிக்கப்பட்டனர்.
இந்த நிலையில், பழனி கோசாலையில் இருந்த 17 பசுக்கள் போதிய தீவனங்களின்றி உயிரிழந் ததாக கோயில் இணை ஆணையர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்தக் கோசாலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுகின்றன. எனவே, பசுக்களின் உண்மை நிலையைக் கண்டறியவும், எஞ்சியுள்ள பசுக்களைக் காப்பாற்றவும் வழக்குரைஞர் ஆணையரை நியமித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும் என அவர் கோரியிருந் தார்.
இந்த மனு உயர்நீதிமன்ற நீதி பதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரத சக்கரவர்த்தி அமர்வு முன் நேற்று (22.8.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, பழனி தண்டாயுதபாணி கோயில் கோசாலையில் உள்ள பசுக்கள் முறையாகப் பராமரிக்கப் படுவதாகவும், இங்கு பசுக்களின் எண்ணிக்கை அதிகரித்ததால், 218 பசுக்கள் சுய உதவி குழுக்களுக்கு வழங்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருவதாகவும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நீதிபதிகள் எஸ்.எஸ். சுந்தர், டி. பரத சக்கரவர்த்தி ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
பழனி கோயிலுக்கு பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய பசுக்கள் சுய உதவிக் குழுக்களுக்கு எதன் அடிப்படையில் வழங்கப்பட்டன. ஒரு கோசாலையில் பசுக்கள் எண் ணிக்கை அதிகரித்தால், மற்றொரு கோசாலைக்கு அவற்றை இடமாற் றம் செய்ய வேண்டும்.
எனவே, சுய உதவிக் குழுக்க ளுக்கு வழங்கப் பட்ட பசுக்களின் நிலை குறித்து வழக்குரைஞர் ஆணையர் கள ஆய்வு செய்து, செப். 14-ஆம் தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றனர் நீதிபதிகள்.
No comments:
Post a Comment