சென்னை, ஆக. 27 சென்னை மாநகராட்சி ஆணையர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கிருஷ்ணாம்பேட்டை இடுகாட்டுக்கு சென்று அங்கு குவிந்து கிடந்த குப்பைகளை அள்ளினார். அவருடன் மாநகராட்சி ஊழியர்களும் தூய்மைப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆணையாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:- சென்னையில் 42 இடுகாடுகள் உள்ளன. இவற்றை தூய்மையாக வைக்க துப்பரவு, பணி செய்து வருகிறோம். செடி, கொடிகள், குப்பைகளை அகற்றி வருகிறோம். கிருஷ்ணாம் பேட்டை இடுகாட்டில் மேற்கொள்ளப்படும் சீரமைப்புப் பணிகளில் ஊக்கம் அளிக்கும் வகையில் நாங்களும் இணைந்து தூய்மைப் பணிகளை மேற்கொண்டோம். 37 இடுகாடுகளில் தூய்மைப் பணி நடைபெற்று வருகிறது.
சென்னையில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரியும் 358 மாடுகள் பிடிக்கப்பட்டுள்ளது. மாடுகளுக்கு விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிக்க இருக்கிறோம். சென்னையில் ஆங்காங்கே நீண்ட நாட்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அப்புறப்படுத்தும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இவ்வாறு ராதாகிருஷ்ணன் கூறினார்.
No comments:
Post a Comment