வல்லம்,ஆக.2- தமிழ்நாடு அரசின் சார்பில் 2023ஆம் ஆண்டுக்கான ‘தகைசால் தமிழர்’ விருதுக்கு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை தேர்வு செய்து நேற்று (1.8.2023) சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதனைத் தொடர்ந்து, தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தலை வர்கள், பல்துறை அறிஞர் பெருமக்கள், தோழர்கள் பெருமகிழ்வுடன் வாழ்த்து தெரிவித்தவண்ணம் உள்ளனர்.
விழாக் கோலம் பூண்டது வல்லம்
தஞ்சை வல்லத்திற்கு இன்று (2.8.2023) வருகைபுரிந்த தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு கழகத்தோழர்கள், பல்வேறு கட்சியினர், அமைப்பினர் பொதுமக்கள் உற்சாகத்துடன் பெருந்திரளாகத் திரண்டு வரவேற்றனர். தஞ்சாவூர் மாநகர் மேயர் சண் ராமநாதன் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். துணை மேயர் அஞ்சுகம் பூபதி பரிசுப்பொருளை வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
தஞ்சை மாவட்ட கழகத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையில் கழகப்பொறுப்பாளர்கள் ரோஜாப்பூ மாலை அணிவித்து தங்களின் மகிழ்ச்சியைத் தெரிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.
விழாவில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா.ஜெயக்குமார், உரத்தநாடு இரா.குணசேகரன், காப்பாளர் வெ.ஜெயராமன், மு.அய்யனார் உள்ளிட்ட தோழர்கள், பல்வேறு கட்சி களின் பொறுப்பாளர்கள் கலந்துகொண் டனர்.
No comments:
Post a Comment