மயிலாடுதுறையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

மயிலாடுதுறையில் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை

பெரியாரியல் பயிற்சிப் பட்டறை கடந்த 6.8.2023 அன்று காலை 9 மணியளவில் மயிலாடுதுறை தமிழ்நாடு வருவாய் அலுவலர் சங்க கட்டடத்தில் 110 மாணவர்களுடன் தொடங்கியது.  கழக மாவட்ட செயலாளர் கி.தளபதிராஜ் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் கடவாசல் குணசேகரன் தலைமையேற்று உரையாற்றினார். தலைமைக் கழக அமைப்பாளர் சு.கிருஷ்ணமூர்த்தி தொடங்கி வைத்து உரையாற்றினார். திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர், பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் ஒருங்கிணைத்து நடத்தினார். கழக சொற்பொழிவாளர் வழக்குரைஞர் பூவை.புலிகேசி - "தந்தை பெரியார் ஒரு அறிமுகம்" என்ற தலைப்பில் முதல் வகுப்பை நடத்தினார்


No comments:

Post a Comment