சென்னை, ஆக. 13 - 5 லிட்டர் பச்சை நிற பால் பாக்கெட்டுகள் விலை அதிகரிக்கவிலை என ஆவின் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ஆவின் வெளியிட்ட அறிக்கை:
ஆவின் பச்சை நிற பால் பாக்கெட் லிட்டர் ரூ.44க்கு விற்பனை செய்யப்படுகிறது. வணிக நிறுவனத்திற்காக விற்பனை செய்யப்படும் அய்ந்து லிட்டர் பால் ரூ.210க்கு விற்பனை செய்யப்பட்டது. வணிக நிறுவனத்திற்கும் பொதுமக்களுக்கு வழங்கப்படும் விலையிலே வழங்கப்பட வேண்டும் என்ற நோக்கத்துடன் தற்போது ரூ.210லிருந்து ரூ.220 (44ஜ்5) ஆக மாற்றப்பட்டுள்ளது. இது தவறாக புரிந்து கொள்ளப்பட்டு ஆவின் நிறுவனம் பச்சை நிற பால் பாக் கெட்டுகளின் விலையை உயர்த்தி விட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. இவ்வாறு ஆவின் நிறுவனம் கூறியுள்ளது.
No comments:
Post a Comment