துணைத் தேர்வர்களுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க வேண்டுகோள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

துணைத் தேர்வர்களுக்கு ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க வேண்டுகோள்

சென்னை, ஆக. 1-  பொதுத் தேர் வில் தோல்வி பெறும் மாணவர் களுக்கு தேர்வுத்துறையால் சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படும். இதில் வெற்றி பெற்று உயர் கல்வியை மாணவர்களால் தொடர முடியும்.  இந்நிலையில் துணைத் தேர்வுகளில் வெற்றி பெறும் மாணவர் களுக்கு ஒருங் கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன.

தமிழ்நாட்டில் 2016ஆ-ம் ஆண்டுக்குப் பின், 10, 12ஆ-ம் வகுப்பு துணைத் தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஒன்றுக்கும் மேற் பட்ட சான்றிதழ்களை வைத்துள்ளவர்களுக்கு ஒருங் கிணைத்து ஒரே மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படுகிறது.

அதேநேரம் அதற்கு முந்தைய ஆண்டுகளில் தேர்ச்சி பெற்றவர் களுக்கு இதுபோல் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வுத்துறை வழங்கு வதில்லை. 

இதனால் வேலை வாய்ப்பு, உயர்கல்வி உட்பட பல்வேறு நேரங்களில் மாணவர்கள் பாதிக்கப்படும் சூழல் உள்ளது. எனவே, இந்த விவகாரத்தில் தமிழ் நாடு அரசு நேரடியாக தலையிட்டு அனைவருக்கும் ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ் வழங்க முன்வர வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து தேர்வுத் துறை உயர் அதிகாரிகளிடம் கேட்ட போது, ‘‘தமிழ்நாட்டில் 2016ஆ-ம் ஆண்டில் இருந்துதான் மாண வர்களுக்கு அடையாள எண் வழங் கும் நடைமுறை அமலில் உள்ளது. அந்த மாணவர்களின் விவரங்கள் முழுமையாக இணைய தளத்தில் சேக ரித்து வைக்கப்பட் டிருக்கும். இதனால் அவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் களை நம்மால் ஒருங்கிணைந்து வழங்க முடியும்.

அதற்கு முந்தைய ஆண்டு களில் படித்தவர்களுக்கு அந்த வசதிகள் இல்லாததால் ஒருங்கிணைந்த சான்றிதழ் வழங்க முடியாது’’ என்றனர்.

No comments:

Post a Comment