சென்னை, ஆக 11 'காலி மனை தொடர்பான பத்திரங்களில், அந்த நிலத்தின் சமீபத்திய தேதியுடன் எடுக் கப்பட்ட ஒளிப்படத்தை இணைப்பது கட்டாயம்' என, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் உத்தர விட்டுள்ளார்.
தமிழ்நாட்டில், காலி மனை பத்திரங்களை பதிவு செய்ய, கள ஆய்வு மேற்கொள்வதில்லை. சில இடங்களில், காலி மனை என்று குறிப்பிட்டு தாக்கலாகும் பத்திரங்களில், கட்டடங்கள் மறைக்கப்படுவதால், பதிவுத் துறைக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. இது தொடர்பாக சார் - பதிவாளர்களுக்கு, பதிவுத் துறை தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிறப்பித்துள்ள உத்தரவு: பத்திரத்தில் கட்டடம் தொடர்பான விவரங்களை மறைப்பதை தடுக்க, சம்பந்தப்பட்ட நிலத்தை எளிதில் அறியும் வகையில், புவியிட தகவல்கள் மற்றும் தேதியுடன், சமீபத்தில் எடுக்கப்பட்ட புகைப் படத்தை, ஆவணத்தில் இணைக்க வேண்டும். இதை அனைத்து ஆவண தாரர்களும், ஆவணம் எழுதுவோரும் அறியும் வகையில் விளம்பரப்படுத்த, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காலி மனை பத்திரங்கள் பதிவுக்கு வரும்போது, முந்தைய ஆவணங்களில், கதவு எண், மின் இணைப்பு, குடிநீர், வடிகால் இணைப்பு எண், சொத்து வரி எண் குறிப்பிடப்பட்டு இருந்தால், கள ஆய்வு மேற்கொள்வது கட்டாயம். முந்தைய ஆவணங்களில் வீட்டுக் கட னுக்காக ஆவண ஒப்படைப்பு அட மான பத்திரம் பதிவாகி இருந்தாலும், கள ஆய்வு கட்டாயம். முந்தைய ஆவ ணத்தில் வீடு இருப்பது குறிப்பிடப்பட்டு, அது தற்போது இடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டாலும், அங்கு கள ஆய்வு செய்வது கட்டாயம். சம்பந்தப் பட்ட நிலத்தின் புவியிட தகவல்கள், தேதியுடன் புகைப்படம் எடுத்து, களப் பணி அறிக்கையில் இணைக்க வேண் டும். இந்த வழிமுறைகளை கடை பிடிக்காமல், கட்டடம் இருக்கும் இடத்தை காலி மனையாக பதிவு செய்யும் அலுவலர்கள் மீது, கடுமை யான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் படும். பத்திரங்கள் தொடர்பான தணிக்கையிலும், இந்த விதிகள் கடை பிடிக்கப்பட்டு உள்ளதா என, பார்க்க வேண்டும். பொது மக்கள், ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்களுக்கு, இதை பதிவு அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது
No comments:
Post a Comment