ஏட்டுத் திக்குகளிலிருந்து..., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 23, 2023

ஏட்டுத் திக்குகளிலிருந்து...,

 கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்

23.8.2023

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* ம.பி.யில் காங்கிரஸ் ஆட்சி அமைந்ததும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்படும், காங்கிரஸ் தலைவர் மல்லி கார்ஜூன கார்கே உறுதி!

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தங்கள் பணியை நிரந்தரமாக்கவும், ஊதிய உயர்வு கோரியும் போராடும் ஒப்பந்தப் பணியாளர்களின் கோரிக்கை குறித்து விளக்கம் 8 வாரங்களுக்குள் அளித் திட ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்.

* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் மற்றும் உறுப் பினர்களை மட்டுமே மோடி அரசு தொடர்ந்து தாக்கி வருகிறது என மம்தா கண்டனம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* இடஒதுக்கீடு, ஜாதிவாரி கணக்கெடுப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுடில்லி காந்திநகரில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போராட்டம் நடைபெற்றது

தி டெலிகிராப்:

* காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்களை திருடி மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சி அமைத்தது, கருநாடகாவிலும் இதே முறையைக் கையாண்டது  - கார்கே சாடல்.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* சமூக வலைதளங்களில் பதிவிடும் செய்திகளின் உண்மைத் தன்மையைக் கண்டறிய பிரிவு, கருநாடக அரசு முடிவு.

* பொதுப் பாடத் திட்டத்தை மாநிலப் பல்கலைக் கழகங்கள் பின்பற்றத் தேவையில்லை: ஆளுநர் ஆர்.என்.ரவி பல்கலைக் கழகங்களுக்குக் கடிதம்.

- குடந்தை கருணா


No comments:

Post a Comment