அமெரிக்கா - டென்மார்க் நாடுகளில் புதுவகை கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

அமெரிக்கா - டென்மார்க் நாடுகளில் புதுவகை கரோனா வைரஸ் கண்டுபிடிப்பு

ஜெனீவா, ஆக 19 அமெரிக்கா, டென்மார்க், உள்ளிட்ட நாடுகளில்  மக்களை பாதிக்கும் உருமாற்றம் அடைந்த புதுவகை கரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டு அதற்கு  பிஏ.2.86 என பெயரிடப்பட்டுள்ளது.

சீனாவின் வூகான் நகரில் கடந்த 2019-ஆம் ஆண்டு இறுதியில் தோன்றிய கரோனா வைரஸ் உலகம் முழுவதும் இதுவரை 69 கோடிக்கு அதிகமானோரை பாதித்துள்ளது. இதில் 69 லட்சத்துக்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த வைரஸ் அடுத்தடுத்து மாறுபாடு அடைந்து புதிய வகை வைரசாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களை தாக்கி வருகிறது.

கரோனாவின் வீரியம் சமீப காலமாக குறைந்திருக்கும் நிலையில், தற்போது புதிய வகை கரோனா வைரஸ் ஒன்று கண்ட றியப்பட்டுள்ளது. அமெரிக்கா, டென் மார்க், இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ள இந்த வைரசுக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வைரசின் வீரியம் மற்றும் பரவலை கண்காணித்து வருவதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மய்யம் (சி.டி.சி) தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அந்த மய்யம் தனது எக்ஸ் (டுவிட்டர்) தளத்தில், 'கரோனாவை ஏற்படுத்தும் வைரசின் புதிய வகை ஒன்றை சி.டி.சி. கண்காணித்து வருகிறது. இந்த வகைக்கு பிஏ.2.86 என பெயரிடப்பட்டு உள்ளது. இது அமெரிக்கா, டென்மார்க் மற்றும் இஸ்ரேலில் கண்டறியப்பட்டு உள்ளது' என கூறியுள்ளது.


No comments:

Post a Comment