சென்னை, ஆக. 4 "வெறுப்புணர்வையும், பிரிவினையையும் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது. அரியானாவில் கலவரக்காரர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விரைவில் இயல்புநிலை திரும்புவ தற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் தனது சமூகவலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "அரியானா மாநிலத்தில் அண்மையில் நடந்த மத வன் முறையில் பாதிக்கப்பட்டு, பெரும் வேதனைக்கும், கடுந்துயருக்கும் ஆளாக்கப்பட்டுள்ளோருக்காகவும் அவர் களின் குடும்பத்தினருக்காகவும் மனமிரங்குகிறேன்.
அமைதி, அகிம்சை, நல்லிணக்கத்துடன் வாழ்தல் ஆகியவற்றில்தான் உண்மையான வலிமை உறைந்துள்ளது என்பதை நாம் நினைவில்கொள்ள வேண்டும். வெறுப் புணர்வும் பிரிவினையும் நம்மை ஆட்கொள்ள நாம் அனுமதிக்கக் கூடாது.
கலவரக்காரர்கள் எந்தத் தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து, விரைவில் இயல்புநிலை திரும்புவதற்கான நடவடிக்கை களை மேற்கொள்ள வேண்டும் என்றும், இனி இதுபோன்ற நிகழ்வுகள் நடைபெறாமல் இருப்பதைத் தக்க முறையில் உறுதிசெய்திட வேண்டும் என்றும் அரியானா அரசினை நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment