அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 25, 2023

அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கு ரத்து உயர் நீதிமன்றம் உத்தரவு

திருச்சி, ஆக. 25- நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு மீதான வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் நேற்று (24.8.2023) உத்தர விட்டுள்ளது. திருச்சியில் ‘கலைஞர் அறிவாலயம்’ கட்டப்பட்டுள்ளது.

 இதற்கான நிலம் தன்னிடம் இருந்து வாங்கப்பட்டதாகவும், பல கோடி மதிப்புள்ள நிலத்துக்கு மிகக் குறைந்த விலையே தரப்பட்டதாகவும் துறையூரைச் சேர்ந்த சீனிவாசன்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதுசம்பந்தமாக திருச்சி நீதிமன் றத்தில் நிலுவையில் உள்ள வழக்கை ரத்து செய்யக் கோரி அமைச்சர் நேரு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன் நேற்று (24.8.2023) விசார ணைக்கு வந்தது. அப்போது நில அபகரிப்பு வழக்கினை பதிவு செய்த சீனிவாசன் சமரச மனுத் தாக்கல் செய்தார்.

அமைச்சர் நேரு தரப்பில், இந்த வழக்கில் சமரசமாகச் சென்று விட்ட தால் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment