ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் எழுத்தாளர்கள் இமையம், சல்மா, கா.உதயசங்கர் பங்கேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

ஈரோடு புத்தகத் திருவிழாவின் சிந்தனை அரங்க நிகழ்வில் எழுத்தாளர்கள் இமையம், சல்மா, கா.உதயசங்கர் பங்கேற்பு

ஈரோடு, ஆக. 9- 19 ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழாவில் 08.08.2023 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை  மாலை 6 மணிக்கு நடைபெற்ற  சிந்தனை அரங்க நிகழ்விற்கு   yes & yes Infracon  நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் டி.சண் முகன் தலைமையேற்றார்.

சிகரம் கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறு வனத்தின் மேலாண்மை இயக்குநர் ஆர். சிவலிங்கம் வாழ்த்துரை வழங் கினார். 

மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் த.ஸ்டாலின் குணசேகரன் அறிமுகவுரை நிகழ்த்தினார்.

‘ அண்மையில் எமைக்கவர்ந்த அய்ந்து நூல்கள் ‘ என்ற தலைப்பில் உரை நிகழ்த்திய எழுத்தாளர் இமையம் , தான் சமீபத்தில் படித்த அய்ந்து புத்தகங்கள் குறித்தும் அந்த புத்தகங்களில் சொல்லப்பட்டிருக் கும் வரலாற்று நிகழ்வுகள்,  மனிதர் களின் வாழ்வியல் வலிகள் ஆகிய வற்றைப் பதிவுசெய்தார்.

‘ எழுத்தும் வாழ்வும் ‘ என்ற தலைப்பில்  உரைநிகழ்த்திய எழுத் தாளர் சல்மா, இன்றைய சமூகம் பெண்களை எவ்வாறு நடத்துகிறது என்பதையும், தன் வாழ்வில் சந்தித்த பெண்களின் வாழ்நிலை குறித்தும் தனது உரையில் விளக்கிப் பேசினார்.

முன்னதாக ‘குழந்தைகளின் அற்புத உலகில்’ என்ற தலைப்பில் உரைநிகழ்த்திய கா.உதயசங்கர், குழந்தை இலக்கியம் இன்று அடைந்திருக்கிற வளர்ச்சி, சமீப காலத்தில் அவ்விலக்கியத்திற்கு குழந்தைப் படைப்பாளிகள் அளித்த பங்களிப்பு குறித்து தன்னுடைய உரையில் விரிவாக விளக்கினார்.

இந்நிகழ்வில் பொதுமக்கள், மாணவர்கள் , வாசகர்கள் எனப் பலதரப்பட்டோர் பார்வையாளர் களாகப் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment