அரசுப்பள்ளி வளர்ச்சி குறித்து கிராமசபைக் கூட்டத்தில் விவாதியுங்கள் : தமிழ்நாடு அரசு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, August 11, 2023

அரசுப்பள்ளி வளர்ச்சி குறித்து கிராமசபைக் கூட்டத்தில் விவாதியுங்கள் : தமிழ்நாடு அரசு

சென்னை, ஆக.11  ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வியின் மாநில திட்ட இயக்குநரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப் பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 

சுதந்திர தினமான ஆகஸ்ட் 15-ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்தப்பட உள்ளது. இதில் சமீபத்தில் நடைபெற்ற எஸ்எம்சி கூட்டத்தில் பள்ளி வளர்ச் சிக்காக எடுக்கப்பட்ட முடிவுகளை பகிர்ந்து கொண்டு  விவாதித்து உரிய தீர்மானங்கள் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கிராமசபை கூட்டங்களில் எஸ்எம்சி குழு தீர்மானங்களை பகிர்வதன் மூலம்பள்ளிகளின் தேவைகளை அறிந்துகொண்டு பொதுமக்கள் தங்களின் பங்களிப்பை அளிக்க இயலும். அரசின் வழிகாட்டுதல்களின்படி கிராம சபை கூட்டங்களில் பங்கேற்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, அதன் விவரங்களை தொகுத்து இயக்குநரகத்துக்கு அறிக் கையாக சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment