கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
29.8.2023
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தற்போது பொதுத் தேர்தல் நடைபெற்றால் தெலுங் கானாவில் காங்கிரஸ் அதிக இடங்களை கைப்பற்றும் என கருத்துக் கணிப்பு ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
* ரோஜ்கர் மேளா எனும் வித்தைகள், தேர்தல் காய்ச்சல் காரணமாக மோடி மேற்கொள்ளும் வெத்து நடவடிக்கை என மல்லிகார்ஜூனா கார்கே கிண்டல்.
* ம.பி. சாகர் மாவட்டத்தில் தாழ்த்தப்பட்ட இளைஞன் அடித்து கொலை. அவரது தாய் நிர்வாணப்படுத்தப்பட்டார். காவல் துறை வழக்கு பதிவு செய்யவில்லை என பாதிக்கப்பட் டோர் புகார்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* அரசமைப்புச்சட்டத்தின்படி, ஒன்றிய அரசு மட் டுமே மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்த முடியும்’. பீகாரில் ஜாதிவாரி கணக்கெடுப்பு குறித்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு அறிக்கை தாக்கல்.
தி இந்து:
* பாஜகவுடன் கை கோர்ப்பது பல கட்சிகளுக்கு வசதியாக இருக்காது. நான் அணுகுமுறையை மாற்ற எந்த காரணமும் இல்லை என ராஷ்டிரிய லோக் தளம் கட்சியின் தலைவர் ஜெயந்த் சவுத்ரி விளக்கம். தனது கட்சி இந்தியா கூட்டணியில் இணைந்து பணியாற்றும் என்றும் உறுதி.
தி டெலிகிராப்:
* மணிப்பூரில் மோடி அரசு ஒரு சார்பு நிலை எடுத்துள்ளது. அங்கு நடக்கும் வன்முறை சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாவில் எங்கும் நடக்காத செயல் என மேனாள் உள்துறை செயலாளர் ஜி.கே.பிள்ளை தெரிவித்துள்ளார்
* உ.பி. முசாபர் நகர் பள்ளியில் மாணவனுக்கு அறைந்ததை காட்டும் வீடியோவைப் பதிவேற்றியதற்காக வீடியோ வெளியீட்டாளர் முகமது ஜுபைர் மீது வழக்கு.
* நூஹ் மாவட்டத்தில் இந்துத்துவா குழுக்கள் மத ஊர்வலம் நடத்த அரியானா அனுமதி மறுப்பு. டில்லியில் ஜி-20 மாநாடு நடைபெற உள்ளதால் இந்த நடவடிக்கை.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* ஒன்றிய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் "ஊழல் நம்பர் ஒன்" என்று கூறிய ராஜஸ்தான் பாஜக எம்எல்ஏ கைலாஷ் மேக்வால், அவரை அமைச்சர்கள் குழுவிலிருந்து நீக்குமாறு பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரிக்கை விடுப்பதாக பொதுக்கூட்டத்தில் பேசியதால் பரபரப்பு.
* பாஜக மக்களவை தேர்தலை டிசம்பரில் நடத்தலாம் என்றும், அனைத்து ஹெலிகாப்டர்களும் பிரச்சாரத்திற் காக காவி கட்சியால் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா கூறினார்.
* பாரதிய ஜனதா கட்சியை பதவியில் இருந்து அகற்றினால் மட்டுமே, ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டிற்கு உரிய நிதி கிடைக்கும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment