இந்திய ரூபாய் மதிப்பு-இதுவரை இல்லாத சரிவு! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 20, 2023

இந்திய ரூபாய் மதிப்பு-இதுவரை இல்லாத சரிவு!

மும்பை, ஆக.20 - அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 18.8.2023 அன்று ஒரு பைசா அளவுக்கு சரிந்து, 83.10 ரூபாயாக உள்ளது.

உள்நாட்டு சந்தைகளில் நில வும் எதிர்மறையான நிலை மற்றும் வெளிநாட்டு நிதி வெளியேற்றம் ஆகியவற்றின் காரணமாக, ரூபா யின் மதிப்பு குறைந்து வருகிறது. உலகளாவிய சந்தைகளில் நிலவும் பதற்றம் மற்றும் உயரும் அமெரிக்க டாலரி-ன் மதிப்பு போன்றவையும் ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதற்கு காரணமாக கூறப்படுகிறது.

கடந்த 17.8.2023 அன்று, அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு, 1 பைசா குறைந்து 83.09 ஆக இருந்தது.

அமெரிக்காவின் வாராந்திர வேலையின்மை எண்ணிக்கை, முந் தைய வாரத்தின் 2.50 லட்சத்தி லிருந்து இந்த வாரம் 2.39 லட்சமாக குறைந்ததால், அன்றைய நாள் அமெ ரிக்க டாலரின் மதிப்பு அதிகரித்தது. இருப்பினும் சீனாவின் யுவான், 16 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்ததை அடுத்து, சீன மத்திய வங்கி தலையிட்டதால், அமெரிக்க டாலரின் மதிப்பு 18.8.2023 அன்று சற்றே குறைந்துள்ளது.

அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் வீழ்ச்சி வழக்கமான ஒன்றுதான், அசாதாரணமில்லை என்று நிதி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறியுள்ளார். மேலும், ரூபாயின் மதிப்பில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், இந்தியாவிற்கு மட்டும் பிரத்யேகமானதல்ல என்றும், அவர் கூறியுள்ளார்.

அமெரிக்க முதலீடுகளின் வரு வாய் மதிப்பு மாறுபடும்போது, அது அனைத்து நாணயங்களின் பரிமாற்ற விகிதங்களிலும் தாக் கத்தை ஏற்படுத்தும். இதற்கு இந்திய ரூபாயும் விதிவிலக்கல்ல.

ரூபாயின் ஏற்ற இறக்கத்தால் பணவீக்கம் பாதிக்கப்பட்டாலும், ரிசர்வ் வங்கி அதற்கான நடவடிக் கைகளை மேற்கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது.

பரிமாற்ற விகிதங்கள் மிகவும் நிலையற்றதாக இருப்பதால், ரூபா யின் மதிப்பு நீண்ட காலத்திற்கு இதே நிலையில் நீடிக்கும் என்று கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment