சென்னை, ஆக.2- கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி அவதூறு பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழ் நாடு காவல்துறை தலைமை இயக் குநர் சங்கர் ஜிவால் எச்சரித் துள்ளார்.
தமிழ்நாட்டில் தகுதி வாய்ந்த பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் செப் டம்பர் 15 முதல் தொடங்க உள் ளது. இதற்கான வழிகாட்டி நெறி முறைகள் மற்றும் யார் யாருக்கு இந்த பணம் கிடைக்கும் என்பது குறித்து அறிவிப்பை அண்மையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்டிருந்தது.
இந்த நிலையில் கலைஞர் மக ளிர் உரிமைத் தொகையை வழங் குவதற்காக காவல்துறையினருக்கு பணம் வசூல் செய்ய மறைமுக உத்தரவு பறந்துள்ளதாகவும், இத னால் காவல்துறை டார்கெட் வைத்து பண வசூலில் இறங்கி உள்ளது என்று தினமலர் நாளேடு செய்தி வெளியிட்டது.
இந்த நிலையில் அவதூறு பரப் பினால் கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் எச்சரித்துள்ளார்.
தினமலர் நாளிதழில் டீக்கடை பெஞ்சு என்ற பகுதியில் தமிழ்நாடு தலைமைக்காவல் இயக்குநர் தமிழ் நாட்டில் உள்ள 2460 காவல் நிலையங்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு லட்சம் கட்டாயம் வசூல் செய்து அனுப்பவேண்டும். அதன் படி ஒரு நாளைக்கு ரூ 25 கோடி டார்கெட் வைத்துள்ளார், என்றும் மதுபோதையில் வாகனம் ஓட்டுதல், ஹெல்மெட், இன்ஸூ ரன்ஸ், ஓவர் ஸ்பீட், சீட்பெல்ட் என்ற வகைவகையாக அபராதம் வசூலிக்க காவல்துறை உயரதிகாரி களின் உத்தரவின் பேரில் சட்டம் ஒழுங்கு பராமரிப்பு எல்லாவற் றையும் கைவிட்டு விட்டு காவலர் கள் ரோட்டில் நிற்கின்றனர் என்று கற்பனையாகப் பேசுவது போல் எழுதியுள்ளது.
தினமலரின் இப்பொய்ச் செய்தி சமூக வலைதளங்களில் பரவி காவல் துறையின் நற்பெய ருக்கும் இழுக்கு விளைவிக்கும் காரணியாக அமைந்துவிட்டது.
இது தொடர்பாக தமிழ்நாடு காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”31.07.2023 தேதியிட்ட தினமலர் செய்தித் தாளின் பக்க எண் 8-இல் குறிப் பிட்டுள்ள ’டீக்கடை பெஞ்சு’ பகுதியில் மகளிர் உரிமைத்தொகை வழங்க ’மாஸ்டர் பிளான்’ என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள செய்தி உண்மைக்கு மாறானது.
மகளிர் உரிமைத்தொகை தர போதுமான நிதி திரட்ட அரசு பல வழிகளில் திட்டமிடுகிறது எனவும் அந்த வகையில் ஒவ்வொரு காவல் நிலையமும் வாகன ஓட்டிகளிடம் தலா ரூ.1 லட்சம் அபராதம் வசூல் செய்ய வேண்டும் என்று மறைமுக உத்தரவு போட்டிருப்பதாகவும் செய்தி வெளிவந்துள்ளது.
தமிழ்நாடு அரசோ, காவல் துறையோ இதுபோன்ற எந்த ஒரு உத்தரவும் நேரடியாகவோ மறை முகமாகவே பிறப்பிக்கவில்லை என்று தெரிவிக்கப்படுகிறது.
வாகன ஓட்டிகளுக்கு இலக்கு வைத்து எந்த ஒரு அபராதமும் தமிழ்நாடு காவல்துறை வசூல் செய்வதில்லை. இதுபோல் பொய் யான தகவல் பரப்புவோர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று தமிழ்நாடு காவல்துறை சார்பாக தெரிவிக்கப் படுகிறது என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதனை அடுத்து தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர், "கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பற்றி உண்மைக்கு மாறாக தகவல் பரப்பப்படுகின்றன.
இதுபோன்ற பொய்யான தக வல்கள் பரப்புவோர் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப் படும்’’ என்று எச்சரித்துள்ளார்.
No comments:
Post a Comment