தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

தொற்று நோய் மருத்துவமனையில் உதவி செவிலியர் பயிற்சி

சென்னை, ஆக.27  சென்னை தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவ மனையில் 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சிக்கு மாணவியர்  சேர்க்கை தொடங் கப்பட்டுள் ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.

      சென்னை மாநகராட்சி, பொது சுகாதாரத்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் தண்டையார்பேட்டை தொற்று நோய் மருத்துவமனையில் 2023-_2024 ஆம் ஆண்டிற்கான மருத்துவ இணையியல் படிப்பான, 2 ஆண்டு உதவி செவிலியர் பயிற்சி (ஏ.என்.எம் கோர்ஸ்) தொடங்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் பணியாளர்களின் வாரி சுகள் மற்றும் சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பயின்ற மாணவியருக்கும் முன்னுரிமை அளிக்கப்படும்.

    மேலும் அரசு மற்றும் அரசு சார்ந்த பள்ளிகளில் பயின்ற  மாணவியரும் விண்ணப்பிக்கலாம். உதவி செவிலியர் பயிற்சிக்கு 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.  

தமிழ்நாடு அரசு விதிகளின் படி ஒற்றைச் சாளர முறையில்  சமூகம் வாரியாக சுழற்சி முறையில் மாணவியர் தேர்ந் தெடுக்கப்படுவர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இயக்குநர் (பொ) தொற்று நோய் மருத்துவமனை எண்.187, திருவொற் றியூர் நெடுஞ்சாலை, தண்டையார் பேட்டை, சென்னை-600 081 என்ற முகவரியில் உள்ள  தொற்று நோய் மருத்துவமனை அலுவலகத்தில் 30.8.2023 முதல் 7.9.2023 வரை காலை 10 மணி முதல் மாலை 4 மணி  வரை அனைத்து வேலை நாட்களிலும் விண் ணப்பங்களைப் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 8.9.2023 மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க  வேண்டும். அதன் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட மாட்டாது

No comments:

Post a Comment