திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில்
‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்’
ஒரு நாள் தேசிய சிறப்புக் கருத்தரங்கம்
தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி துவக்கி வைத்து கருத்தரங்க விளக்க உரை
வரலாற்றுத்துறை பேராசிரியர்கள், மாணவர்கள் உற்சாகத்துடன் பங்கேற்றனர்
சென்னை, ஆக.6 - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில் சென்னை பெரியார் திடலில் 4.8.2023 அன்று காலை தொடங்கி மாலை வரை ‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்’ என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது.காலை முதலே வரலாற்றுத்துறையைச் சேர்ந்த மாணவச் செல்வங்கள் பேரார்வத்துடன் தங்கள் பெயர், தாங்கள் பயிலும் கல்லூரி உள்ளிட்ட விவரங்களுடன் கருத்தரங்கில் பேரா ளர்களாக, பங்கேற்பாளர்களாகத் தங்களைப் பதிவு செய்துகொண்டனர். பல்வேறு கல்லூரி களின் வரலாற்றுத்துறை பேராசிரியர்களும் தங்கள் விவரங்களை பதிவு செய்தனர்.
பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.ராதா மன்றம் மாணவர்கள், பேராசிரியர்கள், கல்வி யாளர்களைக் கொண்ட சான்றோர்களால் நிறைந்தது.
பெரியார் மணியம்மை அறிவியல் தொழில் நுட்ப நிறுவன (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) வேந்தர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் கருத்தரங்கத்தை தொடங்கிவைத்து தொடக்க உரையை விளக்க உரையாக ஆற்றினார்.
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பல்வேறு வரலாற்று ஆதாரங்களை எடுத்துக்காட்டி, பல்வேறு காலக்கட்டத்திலும் தொடர்ந்த ஆர்.எஸ்.எஸ். கொள்கையை பாடத்திட்டத்தில் திணிக்கின்ற வரலாற்றுத் திரிபுவாதங்களை அடுக்கடுக்கான ஆதாரங் களுடன் எடுத்துரைத்தார். பல்கலைக்கழக பாடத்திட்டங்களில் வகுப்புவாத நஞ்சை விதைத்து பரப்பப்படுகின்ற திரிபுவாதங்களை விளக்கியும், தகுந்த எதிர்ப்பு வந்தபோது திரிபு வாத பாடத்திட்டங்கள் விலக்கிக் கொள்ளப் பட்டதையும் எடுத்துக்கூறினார்.
வரலாற்றுத் துறை பேராசிரியர்கள், பல்வேறு கல்லூரிகளிலிருந்தும் இருபால் மாணவர்கள் என காலை முதல் மாலை வரை கருத்தரங்கில் பேரார்வத்துடன் பங்கேற்றனர்.
திராவிடர் வரலாற்று ஆய்வு மய்யத் தலைவர், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் பெ. ஜெக தீசன் கருத்தரங்கத் தலைப்பு குறித்து அறிமுக உரையாற்றினார்.
கருத்தரங்கத்தின் முதல் அமர்வில் கீழடி தொல்லியல் ஆய்வாளர், இந்திய தொல்லியல் துறை கண்காணிப்பு தொல்லியல் வல்லுநர் டாக்டர் அமர்நாத் ராமகிருஷ்ணா, சென்னை பல்கலைக்கழக பண்டைய வரலாறு மற்றும் தொல்லியல் துறை பேராசிரியர் பேராசிரியர் டாக்டர் பி. சண்முகம் கருத்தரங்க உரையாற்றி னர்.
இரண்டாம் அமர்வில் - திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் வரலாற்றுத் துறை பேராசிரியர் அ. கருணானந்தன் கருத்தரங்கில் பல்வேறு தரவுகளுடன் உரையாற்றினார்.
பேராசிரியர்கள், ஆய்வாளர்களின் கலந்து ரையாடல் மூன்றாம் அமர்வாக நடைபெற்றது.
இக்கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்கள், மாணவர்களில் பெரும்பாலானவர்கள் பாடத் திட்டத்தில் வரலாற்றிலேயே திரிபு என்பதை யறிந்து பெரும் அதிர்ச்சி அடைந்தனர்.
மேலும், கருத்தரங்கின் நிறைவில் கேள்வி - பதில் நிகழ்வில் தங்களைப்போன்ற இளம் பேராசிரியர்கள் பாடத்திட்டத்தில் உள்ளதை அப்படியே உண்மை என்று நம்பிதான் பாடத்தை நடத்தி வருகிறோம், இதுபோன்ற வரலாற்றுத் திரிபுகளைக் கண்டறியும் நுட்பத்தை எங்களுக்கு சொல்லித்தாருங்கள் என்றனர்.
கருத்தரங்க தொடக்க நிகழ்வில் பச்சை யப்பன் கல்லூரி மேனாள் முதல்வர் பி.ஆர். அரங்கசாமி பங்கேற்றார்.
நிகழ்வு ஏற்பாடுகளை கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ், பொருளாளர் வீ. குமரேசன் ஆகியோர் கவனித்துக் கொண்டனர். பேராசிரியர் ரஷீத்கான் மற்றும் கழகத் துணைப் பொதுச் செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நிகழ்ச்சியினை ஒருங்கிணைத்தனர்.
கருத்தரங்கில் பங்கேற்ற பேராசிரியர்களுக் கும் மாணவர்களுக்கும் பங்கேற்புச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
இக்கருத்தரங்கம் பெரிதும் சிந்தனைக்குரி யதாகவும், பயனுடையதாகவும் அமைந்ததாக மாணவர்கள் மட்டுமின்றி பேராசிரியர்களும் மனநிறைவுடன் கூறினார்கள்.
No comments:
Post a Comment