சென்னை, ஆக.11 தேர்தல் தகராறு தொடர்பாக அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, பெரிய கருப்பன், கண்ணப்பன், ரகுபதி ஆகியோர் மீதான வழக் குகளை ரத்து செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூ ரில், 2019 மக்களவை தேர் தலில் வேட்பு மனு தாக்கல் செய்ய சென்றபோது, அனு மதிக்கப்பட்ட வாகனங் களைவிட அதிக வாகனங் களில் சென்றதாக, செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது, கரூர் நகர காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.
இதேபோல, அரவக் குறிச்சி இடைத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க.,வினர் இடையே நடந்த மோதல் தொடர்பாக, செந்தில் பாலாஜி மீது அரவக்குறிச்சி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சிவகங்கை தொகுதியில், 2016 சட்டசபை தேர்தலின் போது, அ.தி.மு.க., - தி.மு.க., இடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக, அமைச்சர்கள் பெரிய கருப்பன், கண்ணப்பன் மீது பள்ளத்தூர் காவல் நிலையத்தில் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டன. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி, 2018இல் உரிய அனுமதி பெறாமல் தி.மு.க., ஆர்ப்பாட்டம் நடத்தியதாக, அமைச்சர் கள் ரகுபதி உட்பட அய்ந்து பேர் மீது, பொன்னமராவதி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக் கோரி, அமைச் சர்கள் செந்தில் பாலாஜி, பெரிய கருப்பன், கண்ணப் பன், ரகுபதி ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத் தில் தனித் தனியாக வழக் குகளை தொடர்ந்தனர். இந்த மனுக் கள் நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந் தன. அப்போது, 'இந்த வழக்கு களில் குற்றப்பத் திரிகை, காலதாமதமாக தாக்கல் செய்யப்பட்டுள் ளது. தேர்தலின்போது நடந்த சிறிய நிகழ்வுகள் தொடர் பான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்' என, மனுதாரர்கள் தரப் பில் வாதிடப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, மனு தாரர்கள் மீதான அனைத்து வழக்கு களையும் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.
No comments:
Post a Comment