தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையில் 3359 காலி இடங்கள்: விண்ணப்பங்கள் வரவேற்பு
சென்னை, ஆக. 9 - தமிழ்நாடு காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள மொத் தம் 3,359.
2ஆம் நிலை காவலர்களுக்கான பணியிடங்களுக்கு விண்ணப்பங் கள் வரவேற்கப்படுவதாக சீருடை பணியாளர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
இதற்கான ஊதிய விகிதம்: ரூ.18,200-_67,100. இணைய வழியில் வரும் 18ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 17ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
காலிப் பணியிடம்:
காவல் துறையில் காலியாக உள்ள இரண்டாம் நிலை காவலர் (மாவட்டம், மாநகர ஆயுதப்படை) பெண்கள் 780 இடங்கள் இரண் டாம் நிலை காவலர் (தமிழ்நாடு சிறப்பு காவல்படை) ஆண்கள் 1,819 இடங்கள்.
சிறை மற்றும் சீர்திருத்தத் துறையில் இரண்டாம் நிலை சிறை காவலர்கள் ஆண்கள் 83, பெண்கள் 3 என மொத்தம் 86 இடங்கள், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையில் ஆண் கள் 674 இடங்களுக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர்.
ஆண்கள் 2,579 இடங்கள், பெண்கள் 783 இடங்கள் என மொத்தம் 3,359 இடங்கள்.
கல்வித் தகுதி:
1ஆம் வகுப்பில் இருந்து 10ஆம் வகுப்பு வரை தமிழ்மொழியை பயிற்று மொழியாக கொண்டு பயின்றிருக்கும் விண்ணப்பதாரர் களுக்கு தேர்வின் ஒவ்வொரு நிலை யிலும் மொத்த காலி பணியிடங் களில் 20 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்படும்.
குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு, எஸ்எஸ்எல்சி அல்லது அதற்கு சமமான கல்வித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
பொது விண்ணப்பதாரர்கள் 1.7.2023 அன்று 18 வயது நிறைவு பெற்றவராகவும் மற்றும் 26 வய துக்கு மிகாமலும் இருக்க வேண் டும். சில பிரிவினருக்கு வயது உச்சவரம்பு தளர்வு பின்பற்றப் படுகிறது.
வயது தகுதிகள்:
பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (பிசி), பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் (இஸ்லாமியர் பிசி(எம்), மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப் பினர் மற்றும் சீர்மரபினர் (எம்பிசி, டிஎன்சி) ஆகியோருக்கு வயது வரம்பு 28 வயது. ஆதிதிராவிடர் (எஸ்சி), ஆதிதிராவிடர் (அருந்த தியர் எஸ்சி, ஏ), பழங்குடியினர் (எஸ்டி) பிரிவினருக்கு 31 வயது. மூன்றாம் பாலினத்தவருக்கு 31 வயது, ஆதரவற்ற விதவைகளுக்கு 37 வயது, மேனாள் ராணுவத்தினர், இத்தேர்விற்கு விண்ணப்பம் பெறப்படும் கடைசித் தேதிக்கு பின்னர் ஓராண்டு காலத்திற்குள் ஓய்வுபெறவுள்ள ராணுவத்தினர், மேனாள் ஒன்றிய ஆயுத காவல் படையினருக்கு 47 வயது நிர்ணயிக் கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு
பிரிவு -I, தமிழ் மொழித்தகுதி தேர்வு: 80 மதிப்பெண்கள், பிரிவு-II, முதன்மை எழுத்துத் தேர்வு: 70 மதிப்பெண்கள்.
தேர்வுக் கட்டணம்: ரூ.250. இணையதள வழியாக செலுத் தலாம். www.tnusrb.tn.gov.in
மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
No comments:
Post a Comment