கிருஷ்ணகிரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

கிருஷ்ணகிரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல்

கிருஷ்ணகிரி, ஆக. 8 - கிருஷ்ணகிரி மாவட்ட கழக பொறுப்பாளர்கள் கலந்துரையாடல் கூட்டம் (6.8.2023) ஞாயிற்றுக் கிழமை அன்று காலை 11 மணி அளவில் கிருஷ்ணகிரி பெரியார் மய்யம் ,மணி யம்மையர் அரங்கில் நடைபெற்றது.

இக்கூட்டம் மாவட்ட தலைவர் த. அறிவரசன் தலைமையில் நடைபெற்றது.

 கிருஷ்ணகிரி ஒன்றிய தலைவர் த.மாது அனைவரையும் வரவேற்று பேசினார்.

இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கா. மாணிக்கம், துணைத் தலைவர் வ. ஆறுமுகம் , பொதுக்குழு உறுப்பினர்கள் கோ. திராவிட மணி,  தா.சுப்பிரமணியம் ஆகியோர் முன் னிலை ஏற்றனர்.

இக்கூட்டத்தின் நோக்கங்கள் பற்றி மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கிருஷ்ணகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா பணிகள் பற்றியும், தமிழர் தலைவர் ஆசிரியர் மற்றும் அமைச்சர் பெருமக்களை வர வேற்று விழாவை எப்படி பிரமாண்ட மாக பெரிய மாநாடு போன்று நடத் துவது என்பதை பற்றியும், தோழர்கள் எவ்வாறு பணி செய்ய வேண்டும் என் பதை பற்றியும் கூட்டத்தின் நோக்கத்தை பற்றி விரிவாக எடுத்துக் கூறி தொடக்க உரையாற்றினார்.

அதனைத் தொடர்ந்து கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள். மேலும் மாநில தொழிலாளர் அணி பொதுச் செயலாளர் மு.சேகர் பெரியார் மய்ய திறப்பு விழா பணிகள் பற்றியும், பெரியார் மய்யம் திறந்தே ஆக வேண் டும் என்று முழு மூச்சில் ஈடுபட்ட தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பணி களை எடுத்து கூறியும் உரையாற்றினார்.

இறுதியாக தலைமை கழக அமைப் பாளர் ஊமை.ஜெயராமன் சிறப்புரை ஆற்றினார். அதில் பெரியார் மய்யம் திறப்பு விழா பணிக்கு வருகை தரும் தமிழர் தலைவர் மற்றும் அமைச்சர் பெருமக்களை அண்ணா சாலை முதல் பெரியார் மய்யம் வரை சிறப்பாக மேளதாளங்களுடன் ஊர்வலமாக அழைத்து வருவது  பற்றியும், திறப்பு பணிகளில் ஒவ்வொருவரும் வேலையை பங்கிட்டு செய்வது  பற்றியும்,  திறப்பு விழா பணிகள் முடியும் வரை ஒவ்வொரு தோழர்களும் எவ்வாறு செயல்படுவது என்பதை பற்றியும் விரிவாக எடுத்துக் கூறினார்.

பெரியார் மய்யத்திற்கு நன்கொடை

கழகத் தோழர்கள் ஒவ்வொருவரும் பேசும்போது பெரியார் மய்யத்திற்கு தாங்கள் இரண்டாவது தவணையாக நன்கொடை எவ்வளவு வழங்குகிறார் கள் என்பதை பற்றி அறிவித்தார்கள் .அதில் தலைமை கழக அமைப்பாளர் ஊமை, ஜெயராமன் 10,000, மாவட்ட தலைவர் அறிவரசன் 10,000, மாவட்ட செயலாளர் கா.மாணிக்கம் 10,000, மாவட்ட துணைத் தலைவர் வ. ஆறு முகம் 10,000, .மாநில பகுத்தறிவாளர் கழக துணை தலைவர் அண்ணா சரவணன் 25,000 ஊற்றங்கரை ஒன்றிய துணைச் செயலாளர் அண்ணா அப்பா சாமி 10,000, மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி 4500  மதுரை கே .பாண்டியராஜன் 2000, மண்டல பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர் இர. கிருஷ்ணமூர்த்தி 35,000 பொதுக்குழு உறுப்பினர் தா. சுப்ரமணியம் 10,000 மாவட்ட பகுத்தறி வாளர் கழக தலைவர் சா .கிருஷ்ணன் 50,000 மாநில பகுத்தறிவு கலைத்துறை செயலாளர் மாரி. கருணாநிதி 2000 மற்றும் கலை நிகழ்ச்சி செலவை ஏற்ப தாக அறிவித்துள்ளார். உறுப்பினர் கோ.திராவிடமணி 2000, கழக துணை செயலாளர் மு.வேடியப்பன் 2000, காவேரிப்பட்டணம் ஒன்றிய தலைவர் பெ. செல்வம் 2000, ப.க பொறுப்பாளர் வேணுகோபால் 2000, மாவட்ட தொழி லாளர் அணி தலைவர் செ.ப.மூர்த்தி 3000, பொடார் கணேசன் 500, கிருஷ்ண கிரி நகர தலைவர் கோ தங்கராசன் 10,000, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் ஆ.கோ.ராஜா 1,000, மாவட்ட இளைஞரணி தலைவர் சீனி முத்து ராஜேசன் 1000 பர்கூர் ஒன்றிய தலைவர் ப.பிரதாப் 1000, மத்தூர் ஒன்றிய செய லாளர் திருமாறன் 2000, கிருஷ்ணகிரி ஒன்றிய செயலாளர் கி.வேலன் 500, ஒன்றிய தலைவர் மாது 1000, மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் பாபு 500, மத்தூர் ஒன்றிய தலைவர் முரு கேசன் 1000, மாவட்ட மகளிர் அணி செயலாளர் ம.ஜான்சி ராணி 500,  மகளிரணி சிவசக்தி 500 ஆகியோர் தங்கள் தங்களின் நன்கொடையை அறிவித்தனர். மொத்தம் ரூபாய் 1,50,000 ஆயிரம் நன்கொடையாக கலந்துரை யாடல் கூட்டத்திலேயே அறிவித்து உள்ளனர்.

மேலும் பெரியார் மய்யம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற கழகத் தோழர்கள் ஒவ்வொரு வேலையும் பகிர்ந்து செய்ய பொறுப்பாளர்கள் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது 

1. விழா வரவேற்பு குழு:

மாநில பொறுப்பாளர்கள்,

மாவட்ட திராவிடர் கழகம்,

மகளிர் அணி

2. சுவரெழுத்து குழு:

தலைமை:பெ. மதிமணியன்,

த. மாது, கி.வேலன்

3. விளம்பரக் குழு

தலைமை: தி.கதிரவன்

சி .சீனிவாசன் ,பெ. செல்வேந்திரன் இல. ஆறுமுகம்

4. ஆட்டோ விளம்பர குழு 

ஆ.கோ ராஜா

5. கடை வசூல் குழு:

தலைமை: சீனிமுத்து ராஜேசன் கோ.சரவணன், பு.ராஜேந்திர பாபு, செ.சிவராஜ், பெ.செல்வம், கி.முருகே சன், ப.பிரதாப், தனசீலன், தனஜெயன், வெங்கடாசலம்

6. பேரணி ஒருங்கிணைப்பு குழு: 

தலைமை: அண்ணா சரவணன்

 ச. கிருஷ்ணன் மற்றும் பகுத்தறிவாளர் கழகம் 

7. கலைக்குழு:

தலைமை: மாரி. கருணாநிதி

ஈ. லூயிஸ் ராஜ்

இர. கிருஷ்ணமூர்த்தி

 மற்றும் ஆசிரியரணி

8. மேடை ஒருங்கிணைப்பு குழு:

தலைமை: வ. ஆறுமுகம்

கோ. திராவிடமணி

ஆகிய எட்டு குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்

ஊற்றங்கரை சாமிநாதன் அவர்க ளின் மகன் செந்தில்குமார், மற்றும் கிருஷ்ணகிரி பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு வீர வணக்கத்தை யும் ,ஆழ்ந்த இரங்கலையும் இக்கூட்டம் தெரிவித்துக் கொள்கிறது எனவும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பில் தகைசால் தமிழர் விருது அளிக்க உள்ள சமூக நீதியின் சரித்திர நாயகர் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு இக்கூட்டம் உளம் கனிந்த நன்றியை, மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறது எனவும், தகைசால் தமிழர் விருது பெறும் நமது குடும்பத் தலைவர் ,தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு இக்கூட்டம் பாராட்டை யும், வாழ்த்தையும் தெரிவித்துக்கொள் கிறது எனவும், அறிவாசான் தந்தை பெரியார்சிலை, படிப்பகம், அம்பேத்கர் நூலகம், மணியம்மையார் கூட்ட அரங் கம் என ஒருங்கே அமையப் பெற்றுள்ள கிருட்டினகிரி பெரியார் மய்யம் திறப்பு விழாவை 25.8.2023 அன்று மாலை அய்ந்து மணிக்கு மிகுந்த எழுச்சியோடு நடத்துவது எனவும் தீர்மானிக்கப்படு கிறது எனவும், 25.8.2023அன்று கிருட் டிணகிரி பெரியார் மய்யம் திறப்பு விழா வில் பங்கேற்க வருகைதரும்  தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்களுக்கும், உணவுத் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அவர்களுக்கும், கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்களுக்கும், மாவட்ட திமுக செய லாளரும் பர்கூர் சட்டமன்ற உறுப் பினருமான மதியழகன் அவர்களுக்கும் எழுச்சிமிகு நல்ல வரவேற்பு அளிப்ப தெனவும், மத்தியப் பல்கலைக் கழகங் களில் சமூகநீதி மறுக்கப்படுவதை கண் டித்து தமிழர் தலைவர் தலைமையில் 12.8.2023அன்று மாலை நான்கு மணிக்கு  வள்ளுவர் கோட்டம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாண வர்கள், இளைஞர்களை பங்கேற்கச் செய்வது எனவும் தீர்மானிக்கப்பட்டது.


No comments:

Post a Comment