திருநெல்வேலி, ஆக. 14 - நாங்கு நேரியில் பிளஸ் 2 படிக்கும் தாழ்த்தப்பட்ட சமூக மாணவன் தாக்கப்பட்ட விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க பள்ளித் தலைமை ஆசிரிய ருக்கு மாவட்ட ஆட்சியர் உத்தர விட்டுள்ளார்.
பள்ளிகளில் மாணவர்கள் ஜாதிரீதியான கயிறுகளை அணி வதை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆட்சியர் கூறியுள்ளார்.
தந்தை பெரியாரின் வழிவந்த திராவிட இயக்க அரசுகள் தொடர்ந்து ஜாதி மதம் அத னால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பயிற்றுவிக்கப் பட்டா லும் மாணவர்களின் மனதில் சில ஜாதி அமைப்புகளும் ஹிந் துத்துவ கட்சிகளின் பிரமுகர் களும் மாணவர்கள் மனதில் ஜாத மதவெறி நஞ்சை விதைத்துக் கொண்டே இருக்கின்றனர்.
அதுவே மாணவர்கள் இடையே மோதலை உருவாக்கு கிறது. வள்ளியூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ஆம் வகுப்பில் நாங்குநேரியைச் சேர்ந்த தாழ்த்தப்பட்ட சமூக மாணவர் சின்னதுரை படித்து வருகிறார். அவருக்கு ஜாதி ரீதியான துன்புறுத்தல் பள்ளியில் இருந்துள்ளது.
சைக்கிளில் காற்றை பிடுங்கி விடுவது, தின்பண்டம் வாங்கி தர சொல்வது, அவதூறாக பேசுவது என சில மாணவர்கள், சின்னதுரையிடம் தொடர்ந்து பிரச்சினை செய்யவே, அந்த மாணவர் மன உளைச்சலுக்கு ஆளானார்.
தனக்கு நேரிடும் துன்பம் பற்றி பள்ளியில் கூறியும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது. இவ்விவகாரம் தெரிய வந்த நிலையில், தொடர்புடைய மாணவர்களை காவல்துறை அதிகாரி எச்சரித்ததாகவும் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த 3 மாணவர்கள், இரவு நேரத்தில் பாதிக்கப்பட்ட மாணவன் வீட் டிற்கு சென்று அவரை அரிவா ளால் வெட்டினர். தடுக்கச் சென்ற சின்னத்துரையின் தாய் அம்பிகாவதியை காலால் எட்டி உதைத்துள்ளனர்.
இதை கவனித்த சின்னத் துரையின் தங்கை சந்திரா செல்வி ஓடிச்சென்று தனது அண்ணனை காப்பாற்ற முயன்ற போது சந்திரா செல்வியையும் அரிவாளால் வெட்டியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இரு வரும் நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தை கண்டித்து உரிய நடவடிக்கை கோரி உறவி னர்கள் போராட்டம் நடத்திய நிலையில், சின்னதுரையின் தாத்தா திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு உயிரிழந்தார்.
இதனிடையே தாக்குதல் குறித்து வழக்குப்பதிந்த காவல் துறையினர் பள்ளியில் தற்போது பயிலும் 4 மாணவர்களையும் 2 மேனாள் மாணவர்களையும் கைது செய்து கூர்நோக்கு இல்லத்தில் அடைத்தனர்.
வன்கொடுமை தடுப்பு சட்டம், கொலை முயற்சி உள் ளிட்ட அய்ந்து பிரிவுகளின் கீழ் அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ஜாதிய மோதல் ஏற் பட்ட பள்ளியில் விரிவான விசாரணை நடத்தி முதன்மை கல்வி அலுவலரிடம் அறிக்கை அளிக்க தலைமை ஆசிரியருக்கு மாவட்ட ஆட்சியர் கார்த்தி கேயன் உத்தரவிட்டுள்ளார்.
மாவட்டம் முழுவதும் ஜாதிய மோதல்கள் உள்ள பள்ளிகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், அப்பள்ளிகளில் காவல்துறை கண்காணிப்பு தீவிரப்படுத்தப் படும் என்றும் அவர் தெரிவித்தார். இதே போன்று, பள்ளியில் மாணவர்கள் ஜாதி ரீதியான கயிறுகளை அணிவதை கண்காணிக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளதாக கூறினார்.
மேலும், மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து அரசு, அரசு உதவிபெறும் பள்ளி மாணவர் களுக்கும், பெற்றோர்களுக்கு மனநல ஆலோசனை கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள் ளதாக மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment