பெரியார் மய்யத்தின் நுழைவு வாயிலில் கழகத் துணைத் தலைவர் கலி.பூங்குன்றன் கழகக் கொடியை ஏற்றி வைத்தார்.
பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் சார்பாக கிருட்டினகிரியில் பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை திறப்பு, நூலகம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்தார் கழகத் தலைவர். காலை சரியாக 9 மணிக்கு அண்ணா சதுக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, அர. சக்கரபாணி, ஆர். காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.மதியழகன், ஒய்.பிரகாஷ், பரிதா நவாப், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மாலை அணி வித்து முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்.
சரியாக காலை 9.40 மணி அளவில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெறும் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள கார்னேசன் திடலுக்கு கழகத் தலைவரை ஜீப்பில் அமர வைத்து ஊர்வலமாக கழகத் தோழர்கள் பொதுமக்கள் புடைசூழ முழக்கமிட்டு அழைத்துச் சென்றனர்.
தாரை தப்பட்டைகள் முழங்கின
அண்ணா சிலையில் இருந்து பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக மகளிர் அணித் தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் அணிவகுத்து சென்றனர்.
கிருட்டினகிரி நகர் முழுவதும் கழகக் கொடிகள் பட்டொளி வீசிப் பறந்தன. கழகக் கெடிக் காடாக காட்சி அளித்தது. காணும் இடம் எங்கும் கிருட்டினகிரி நகரை பதாகைகள் அலங்கரித்தன.
சாலையின் இருபுறமும் பொதுமக்கள் கழகத் தலைவரை உற்சாகத்துடன் பார்த்து கையசைத்து வணக்கம் கூறி மகிழ்ந்தனர்.
செல்லும் வழியில் டாக்டர் அம்பேத்கர் அவர் களின் சிலைக்கு காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சரியாக 10.20 மணிக்கு புதுப்பேட்டை காலனி ரோடு வழியாக விழா அரங்கிற்கு கழகத் தலைவர் வந்தடைந்தார்.
பெரியார் மய்யத்தை கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சரியாக 10.20 மணிக்குத் திறந்து வைத்தார்.
மய்யத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு திறந்து வைத்தார்.
உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக் கரபாணி அண்ணல் அம்பேத்கர் நூலகத்தைத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் வீரமணி படிப்பகத்தை கைத்தறி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
அன்னை மணிம்மையார் அரங்கத்தை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத் தார். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுக் கல் வெட்டினை கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார்.
அமைச்சர் பெருமக்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்கள். கழகத்தின் லட்சியக் கொடியை திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஏற்றி வைத்தார். விண்ணைமுட்டக் கொள்கை முழக்கமிட்டனர் கழகத் தோழர்கள்.
பின்னர் விழா மேடைக்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் பார்த்து மகிழும் வண்ணம் பறை இசையுடன் 10.35 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
வரலாற்று சிறப்புமிக்க முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு அனைவரையும் கிருட்டினகிரி மாவட் டத் தலைவர் த.அறிவரசன் வரவேற்று மகிழ்ந்தார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, நீட் என்னும் கொலைகாரத் தேர் வைத் தொடர்ந்து எதிர்த்து வரக்கூடிய "திராவிட மாடல்" அரசு அதில் உறுதியாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து 10.48 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சுயமரியாதைச் சுடரொளிகள் படங்களை திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். மாண்புமிகு அமைச்சர் பெரு மக்கள் அமைச்சர் கே என் நேரு, அர. சக்கரபாணி, ஆர்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.மதியழகன், ஓய் பிரகாஷ் மற்றும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், நகர்மன்றத் தலைவர் பி.பரிதா நவாப், மாவட்ட ஊராட்சிக் குழு பெருந்தலைவர் மணி மேகலை நாகராஜ், ஓசூர் நகர மாநகரத் தந்தை எஸ்.ஏ..சத்யா ஆகியோர் களுக்கு சிறப்பு செய்யப் பட்டது.
தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று 103 வயதான பெங்களூரு வீ.மு.வேலு, 102 வயதான ஆத்தூர் ஏ.வே.தங்கவேல் ஆகியோருக்கு "தகை சால் தமிழர்" ஆசிரியர் சிறப்பு செய்து பாராட்டினார்
கழகப் பொதுச் செயலாளர் உரை
விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்புச் செயலாளர் கோவேந்தன், "கிருஷ்ணகிரியில் வர லாற்றுச் சிறப்புமிக்க மய்யம் அமைந்துள்ளது. சென் னையில் பெரியார் திடல், தருமபுரியில் பெரியார் மன்றம் இருப்பது போல ஓசூரிலும் பெரியார் மன் றம் திறக்க வேண்டும். ஓசூரில் அதனை உருவாக் குவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் தருவேன்" என்று தெரிவித்தார். "சமூக நீதித் தலைவர்கள் ஆன அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற தலைவர் களின் கடுமையான உழைப்பால் தமிழ்நாடு செழிப் போடு இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், "கிருட் டினகிரியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஓசூரில் தந்தை பெரியாரின் சிலையை நிறுவுவதற்கு ஓசூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றி யுள்ளோம். அதனைத் திறப்பதற்காக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம்" என்றார்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெய ராமன் தலைமை உரையில், "ஜாதி, மதம், பண்பாடு கலாச்சாரத்தால் பிரிக்கப்பட்டு இருந்தாலும் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத் தின் சார்பாக கிருட்டினகிரியில் பெரியார் மய்யம், தந்தை பெரியார் சிலை திறப்பு, நூலகம் திறப்பு விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்கு வருகை தந்தார் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள். காலை சரியாக 9 மணிக்கு அண்ணா சதுக்கத்தில் உள்ள அறிஞர் அண்ணா சிலைக்கு தமிழர் தலைவர் ஆசிரியர், அமைச்சர் பெருமக்கள் கே.என்.நேரு, அர. சக்கரபாணி, ஆர். காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.மதியழகன், ஒய்.பிரகாஷ், பரிதா நவாப், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் மாலை அணி வித்து முழக்கமிட்டு மரியாதை செலுத்தினர்.
சரியாக காலை 9.40 மணி அளவில் முப்பெரும் விழா நிகழ்ச்சி நடைபெறும் பழைய பேருந்து நிலையம் அருகிலுள்ள கார்னேசன் திடலுக்கு கழகத் தலைவரை ஜீப்பில் அமர வைத்து ஊர்வல மாக கழகத் தோழர்கள் பொதுமக்கள் புடைசூழ முழக்கமிட்டு அழைத்துச் சென்றனர்.
தாரை தப்பட்டைகள் முழங்கின
அண்ணா சிலையில் இருந்து பெங்களூரு நெடுஞ்சாலை வழியாக மகளிர் அணித் தோழர்கள், கழகப் பொறுப்பாளர்கள் அணிவகுத்து சென்றனர்.
கிருட்டினகிரி நகர் முழுவதும் கழகக் கொடிகள் பட்டு ஒளி வீசிப் பறந்தன. கழகக் கெடிக் காடாக காட்சி அளித்தன. காணும் இடம் எங்கும் கிருட்டினகிரி நகரை பதாகைகள் அலங்கரித்தன.
சாலையின் இருபுறமும் பொதுமக்கள் கழகத் தலைவரை உற்சாகத்துடன் பார்த்து கையசைத்து வணக்கம் கூறி மகிழ்ந்தனர்.
செல்லும் வழியில் டாக்டர் அம்பேத்கர் அவர் களின் சிலைக்கு காலை 10 மணியளவில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
சரியாக 10.20 மணிக்கு புதுப்பேட்டை காலனி ரோடு வழியாக விழா அரங்கிற்கு கழகத் தலைவர் வந்தடைந்தார்.
பெரியார் மய்யத்தை கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் சரியாக 10.20 மணிக்குத் திறந்து வைத்தார்.
மய்யத்தின் முகப்பில் வைக்கப்பட்டுள்ள தந்தை பெரியாரின் சிலையை நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் மாண்புமிகு கே.என்.நேரு திறந்து வைத்தார்.
உணவுத்துறை அமைச்சர் மாண்புமிகு அர.சக் கரபாணி அண்ணல் அம்பேத்கர் நூலகத்தைத் திறந்து வைத்தார்.
அதனைத் தொடர்ந்து ஆசிரியர் வீரமணி படிப்பகத்தை கைத்தறி நூல் துறை அமைச்சர் மாண்புமிகு ஆர்.காந்தி திறந்து வைத்தார்.
அன்னை மணிம்மையார் அரங்கத்தை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத் தார். சுயமரியாதைச் சுடரொளிகள் நினைவுக் கல் வெட்டினை கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் திறந்து வைத்தார்.
அமைச்சர் பெருமக்கள் தந்தை பெரியாரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத் தினார்கள். கழகத்தின் லட்சியக் கொடியை திரா விடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் ஏற்றி வைத்தார். விண்ணைமுட்டக் கொள்கை முழக்கமிட்டனர் கழகத் தோழர்கள்.
பின்னர் விழா மேடைக்கு வருகை தந்த சிறப்பு அழைப்பாளர்கள் அனைவரும் பார்த்து மகிழும் வண்ணம் பறை இசையுடன் 10.35 மணிக்கு நிகழ்ச்சி தொடங்கியது.
வரலாற்று சிறப்புமிக்க முப்பெரும் விழா நிகழ்ச்சிக்கு அனைவரையும் கிருட்டினகிரி மாவட் டத் தலைவர் த.அறிவரசன் வரவேற்று மகிழ்ந்தார்.
அதனைத் தொடர்ந்து தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன் முன்மொழிய, மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு இர.குண சேகரன் வழிமொழிந்தார்.
மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர் தமிழ்ச்செல்வி, நீட் என்னும் கொலைகாரத் தேர் வைத் தொடர்ந்து எதிர்த்து வரக்கூடிய "திராவிட மாடல்" அரசு அதில் உறுதியாக வெற்றி பெறும் என்பதில் சந்தேகம் இல்லை என்று குறிப்பிட்டார்.
அதனைத் தொடர்ந்து 10.48 மணிக்கு திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சுயமரியாதைச் சுடரொளிகள் படங்களை திறந்து வைத்தார்.
சிறப்பு அழைப்பாளர்களுக்கு கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தார். மாண்புமிகு அமைச்சர் பெரு மக்கள் அமைச்சர் கே என் நேரு, அர. சக்கரபாணி, ஆர்.காந்தி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் டி.மதியழகன், ஓய் பிரகாஷ் மற்றும் மேனாள் சட்டமன்ற உறுப்பினர் டி.செங்குட்டுவன், மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுகவனம், நகர்மன்றத் தலைவர் பி.பரிதா நவாப், மாவட்ட ஊராட்சிக் குழு பெருந்தலைவர் மணி மேகலை நாகராஜ், ஓசூர் நகர மாநகரத் தந்தை எஸ்.ஏ..சத்யா ஆகியோர்களுக்கு சிறப்பு செய்யப் பட்டது.
தந்தை பெரியாரின் கொள்கையை ஏற்று 103 வயதான பெங்களூரு வீ.மு.வேலு, 102 வயதான ஆத்தூர் ஏ.வே.தங்கவேல் ஆகியோருக்கு "தகை சால் தமிழர்" ஆசிரியர் சிறப்பு செய்து பாராட்டினார்
கழகப் பொதுச் செயலாளர் உரை
விடுதலை சிறுத்தைகள் மாநில அமைப்புச் செயலாளர் கோவேந்தன், "கிருஷ்ணகிரியில் வர லாற்றுச் சிறப்புமிக்க மய்யம் அமைந்துள்ளது. சென் னையில் பெரியார் திடல், தருமபுரியில் பெரியார் மன்றம் இருப்பது போல ஓசூரிலும் பெரியார் மன் றம் திறக்க வேண்டும். ஓசூரில் அதனை உருவாக் குவதற்கு அனைத்து ஒத்துழைப்பையும் தருவேன்" என்று தெரிவித்தார். "சமூக நீதித் தலைவர்கள் ஆன அண்ணல் அம்பேத்கர், அறிஞர் அண்ணா முத்தமிழ் அறிஞர் கலைஞர் போன்ற தலைவர் களின் கடுமையான உழைப்பால் தமிழ்நாடு செழிப் போடு இருக்கிறது" என்று குறிப்பிட்டார்.
சட்டமன்ற உறுப்பினர் ஒய் பிரகாஷ், "கிருட்டினகிரியில் பெரியார் சுயமரியாதைப் பிரச்சார நிறுவனத்தின் முப்பெரும் விழாவில் கலந்து கொள்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். ஓசூரில் தந்தை பெரியாரின் சிலையை நிறுவுவதற்கு ஓசூர் மாநகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம். அதனைத் திறப்பதற்காக தொடர்ந்து முன்னெடுத்து வருகிறோம் என்றார்.
தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெய ராமன் தலைமை உரையில், "ஜாதி, மதம், பண்பாடு கலாச்சாரத்தால் பிரிக்கப்பட்டு இருந்தாலும் அதனைக் கடந்து அனைத்து மக்களுக்கும் பயன்படும் வண்ணம் பெருமையின் அடையாளமாக பெரியார் மய்யம் பல சிரமங்களுக்கு இடையில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மண்ணில் வாழுகின்ற அனைத்து மக்களுக்கும் முதலில் கல்விதான் கிடைக்க வேண்டும். அது கிடைக்கப் பெற்றால் மீதமுள்ள அனைத்து உரிமைகளும் கிடைத்துவிடும். அதனை அனைத்துத் தரப்பு மக்களுக்கும் கொண்டு செல்லும் விதமாக இந்த மய்யம் செயல்படும் என்பதில் அய்யமில்லை. பெரும் கொடை உள்ளத்துடன் இந்த மய்யத்தை உருவாக்கு வதற்கான காரணமாக இருந்தவர்களுக்கும், கார்னேசன் அறக்கட்டளையின் செயலாளர் ஜி.எச்.லோகபிராம் அவர்களுக்கும் நன்றியும் பாராட்டுகளையும் தெரிவிக்கிறோம்" என்றார்.
தொழிலாளர் அணி செயலாளர் மு.சேகர், கிருட்டினகிரியில் "பெரியார் மய்யம் அமைப்பதற்கு ஒத்துழைப்பு அளித்த அமைச்சர் பெருமக்களுக்கும், அதிகாரிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார். ஓசூரிலும் பெரியார் சதுக்கம் அமைய உள்ளது" என்றார்.
கிருட்டினகிரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான டி.மதியழகன், "ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகத் தொடர்ந்து போராடி உரிமைகளைப் பெற்று வருகிறார் நம்முடைய ஆசிரியர் அவர்கள்
கல்விநிறுவனங்கள், மருத்துவமனைகள், முதியோர் இல்லங்கள், குழந்தைகள் இல்லங்கள் என்று உருவாக்கி மக் கள் பயன்படும் வகையில் நிறுவனங்களை நடத்தி வருகிறார்.
பத்து வயதில் மேடை ஏறி 90 வயதிலும் பல்வேறு பொறுப்புகளை ஏற்று - குறிப்பாக 62 ஆண்டு ‘விடுதலை' நாளேட்டின் ஆசிரியராகவும், தகைசால் தமிழர் ஆகவும் எங்கள் கிருட்டினகிரிக்கு வந்துள்ள ஆசிரியர் அவர்களை வாழ்த்துகிறோம் - வணங்குகிறோம்" என்றார்.
கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் தனது உரையில், "காலையில் மிகுந்த உற்சாகத்துடன் ஊர்வலம், நூறு வயது கடந்த விழா நாயகர்களுக்கு பாராட்டு என்பதை பார்க்கும்போது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்தநாள் கொண்டாட்டம் இன்று கிருஷ்ணகிரியில் தொடங்கி உள்ளது. பல மாதங்கள் கிடப்பில் இருந்தாலும், தடைகள் இருந்தாலும் அதனை உடைத்து இன்று விழாவை வெற்றிகரமாக நடத்தி வருகிறோம். இந்நேரத்தில் அய்யா லோகபிராம் அவர்களுக் கும், கட்டட அமைப்புக் குழுவினருக்கும், நன்கொடையா ளருக்கும், பொறுப்பாளர்களுக்கும், தோழர்களுக்கும் நன்றி" என்று குறிப்பிட்டார்.
கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், "தொடக்கத்திலேயே சில தோழர்கள் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்கள் - அது தேவையில்லாததுதான். ஏனென்றால் அறிவாசன் தந்தை பெரியார் அவர்கள் வாழ்நாள் முழுவதும் எதிர்நீச்சல் போட்டு வாழ்ந்தார்கள். அவரது கொள்கை என்றும் வெற்றி பெற்றே தீரும். அரசியல் பாதை, அரசியல் பதவி நாடாத தந்தை பெரியார் தான் மக்களுக்கான அனைத்து உரிமைகளையும் பெற்றுத் தந்தார். தன்னலமறந்து பொதுத் தொண்டு ஆற்றினார். இன்று விண்வெளியில் தமிழர்கள் வெற்றி மேல் வெற்றியை பெற்று வருகின்றனர். தகுதி திறமை தமிழர்களுக்கு உண்டு என்று நிரூபித்துக் காட்டியுள்ளனர். சுயமரியாதை இயக்க வீரர் களுக்கும் வீரவணக்கத்தை செலுத்துகிறேன். இந்நிகழ்ச்சிக்கு அரும்பாடுபட்ட அனைவருக்கும் நன்றியும், வணக்கமும் உரித்தாகுக" என்று கூறி நிறைவு செய்தார்.
அமைச்சர் பெருமக்கள் உரையில்...
கைத்தறி துறை அமைச்சர் ஆர்.காந்தி அவர்கள், "நம்மால் முடியாதது யாராலும் முடியாது, யாராலும் முடியாதது நம்மால் மட்டுமே முடியும்" என்ற ஆசிரியரின் பொன்மொழியை எடுத்துக் கூறி, "ஆசிரியரின் வயது 90. இங்கு பாராட்டு பெற்ற பெரியவர்கள் ஒருவருக்கு 103, ஒருவருக்கு 102 வயது - வியப்படைகிறேன்.இங்கு வரக்கூடிய தோழர்கள் தலைவருக்கு சிறப்பு செய்ய வருகிறார்கள். வரும் தோழர்கள் ஒவ்வொருவரையும் பார்த்து, எழுந்து எழுந்து வணக்கம் கூறுகிறார். அதுவும் டப் டப் என்று. என்ன மரியாதை பாருங்கள். என்னால் முடிய வில்லை. ஆனால் தலைவர் ஆசிரியர் இப்படி பணியாற்று கிறார் - இந்த வயதிலும்.
ஆசிரியரின் பேச்சு, அறிக்கைகள் படிக்கும்போது முக்கியத்துவமாக இருக்கும், ‘திராவிட மாடல்' அரசின் ஆட்சிக்கு நல்லதோர் வழிகாட்டியாக செயல்பட்டு வருகிறார்.
‘திராவிட மாடல்' அரசு, ‘சமூக நீதி‘, ‘இட ஒதுக்கீடு' போன்ற வற்றில் முக்கிய கவனம் செலுத்தி வருகிறார். பெரியார், அறிஞர் அண்ணா, கலைஞர் அவர்களின் எண்ணங்களை நிறைவேற்றி வருகிறது திராவிட மாடல் அரசு" என்றார்.
உணவுத்துறை அமைச்சர் அ.சக்கரபாணி அவர்கள், "தந்தை பெரியார் அவர்கள் இம்மண்ணில் ஒரு சமூகப் புரட்சியை ஜாதி பேதம் இல்லாத சமூகத்தைப் படைக்க வாழ்நாள் முழுவதும் பாடுபட்டார். அதனையே பேரறிஞர் அண்ணாவும், முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞரும் நன்றி செலுத்தும் விதமாக செய்து காட்டினார்கள். உதாரணமாக - ஆட்சிப் பொறுப்பில் அமர்ந்த பிறகு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் உரிமை, பெரியார் நினைவு சமத்துவபுரங்கள் - அதிலேயே தந்தை பெரியாருக்கு சிலை வைத்து பெருமை சேர்த்தார்கள். தோழர்கள் இந்தப் பகுதியில் சில இடையூறுகள் ஏற்பட்டதாக குறிப்பிட்டார்கள் இனி இது போன்று நடக்காமல் பார்த்துக் கொள்வேன். கல்வி இட ஒதுக்கீடு வேலைவாய்ப்புகளில் பெண்களுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் முன்னுரிமை என்று அண்ணா கலைஞர் வழியில் தொடர்ந்து தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது" என்றார்.
நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே என் நேரு, "கடந்த எட்டு மாதங்களாக ஆசிரியர் அவர்கள் இந்தப் பணியை கண்காணித்து வருகிறார்கள். தலைவர் கலைஞர் அவர்கள், தான் ஒரு செயலை எடுத்துக் கொண்டால் அதை முடிக்கும் வரை விடமாட்டார். அதுபோலவே ஆசிரியர் அவர்களும் இன்று அதனை செய்து முடித்துள்ளார்.
இன்று சிலர் நினைத்துக் கொள்கிறார்கள் நாம் படித்தோம் வேலை கிடைத்தது என்று. அது இல்லை, தந்தை பெரியாரின் இயக்கத்தால் தான் கல்வி வேலைவாய்ப்பினை இட ஒதுக்கீடு மூலம் பெற்றுள்ளனர் என்பதை மறந்து விடக்கூடாது.
எங்கள் பகுதி திருச்சி மாவட்டம் - லால்குடி, அதனைச் சுற்றியுள்ள திராவிடர் கழகத்தில் குடும்பம் குடும்பமாக இருந்து வருபவர்கள். தந்தை பெரியாரால் தான் தலை நிமிர்ந்தோம் என்ற நோக்கில் வாரி வாரி நன்கொடைகளை வழங்கி உள்ளனர்.
தந்தை பெரியார் அறிவித்த ஒரு போராட்டத்தில் வாளாடியைச் சேர்ந்த பெரியசாமி என்று சிறுவன் கைது செய் யப்பட்டான் அந்த சிறுவனை ஆளுநர் சிறைச் சாலையைப் பார்வையிட்டபோது பார்த்தார். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்து விடு - விட்டுவிடுகிறோம் என்கிறார்.
அந்தச் சிறுவன் "தந்தை பெரியார் மீண்டும் போராட்டம் அறிவித்தால் போராட்டத்தில் மீண்டும் கலந்து கொள்வேன்" என்றான் இது போன்ற லட்சியத் தொண்டர்கள் உள்ள இயக்கம் திராவிடர் கழகம்.
தந்தை பெரியார் விட்டுச் சென்ற பணிகளை அவர் போட்டுத் தந்த பாதையில் தொடருகிறார் ஆசிரியர். அதற்குச் சான்றிதழ் தான் கல்வி நிறுவனங்கள், மருத்துவமனைகள், படிப்பகங்கள். அவை சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.
கிருட்டினகிரி மய்யம் உருவாக உதவிய முதலமைச்சர் அவர்களுக்கும், அதிகாரிகளுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.
தமிழர் நலனுக்காகவும், உரிமைகளுக்காகவும் தங்களை அர்ப்பணித்துக் கொண்ட குழுவினருக்கும், செயல் வீரர் களுக்கும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களால் சிறப்பு செய்யப்பட்டது. தலைமைக் கழக அமைப்பாளர் ஊமை ஜெயராமன், மாநில ஒருங்கிணைப்பாளர் ஒரத்தநாடு குணசேகரன், தொழிலாளர் அணி செயலாளர் திருச்சி முசேகர் கிருட்டினகிரி மாவட்ட தலைவர் தா.அறிவரசன், மாவட்டச் செயலாளர் கா. மாணிக்கம், மாவட்டத் துணைத் தலைவர் வா ஆறுமுகம், கிருட்டினகிரி நகர தலைவர் போ.தங்கராசன், பொதுக்குழு உறுப்பினர் திராவிடமணி உள்ளிட்ட தோழர்களுக்கும் சிறப்பு செய்யப்பட்டது.
கார்னேசன் அறக்கட்டளையின் செயலாளர் தொண்டறச் செம்மல் ஜி எச் லோக பிராமின் இல்லத்திற்கு கழகத் தலைவர் நேரில் சென்று கிருஷ்ணகிரியில் பெரியார் மயயம் அமைவ தற்கு கொடை உள்ளத்துடன் உதவிய லோகபிராம் அவர் களுக்கும், கார்னேசன் அறக்கட்டளையின் உறுப்பினர் களுக்கும் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து நன்றியை தெரிவித்துக் கொண்டார். லோக பிராம் தம் வீட்டில் மதிய உணவினை ஏற்பாடு செய்திருந்தார்.
பெரியார் தொண்டர்கள் நலநிதி டிரஸ்ட்
மணிமேகலை மதிவாணன் தமிழர் தலைவரின் மருத்துவ செலவிற்கு ரூபாய் 25 ஆயிரம் நன் கொடை வழங்கினார்.
கிருஷ்ணகிரி நகர்மன்றத் தலைவர் (திமுக) பி.பரிதா நவாப் ரூ. ஒரு லட்சம் வழங்கினார்.
அதனைப் பலருக்கும் பயன்படும் வகையில் தொண் டர்கள் நிதி அறக்கட்டளைக்கு வழங்குவதாகக் கழகத் தலை வர் அறிவித்தார். அன்புக்கு நன்றி வணக்கம் என்றார்.
"தகைசால் தமிழர்" ஆசிரியர் நிறைவுரை ஆற்றினார்.
மாவட்ட திராவிடர் கழகத் துணைத் தலைவர் ஆறுமுகம் நன்றி கூறிட, மாநாடு போல் நடைபெற்ற முப்பெரும் விழா சிறப்பாக நிறைவுற்றது.
கிருட்டினகிரி வரலாற்றில் இது ஒரு மைல் கல் - கிரீடம்!
No comments:
Post a Comment